சூரிய கிரகத்திற்கு மாணிக்கம், சந்திர கிரகத்திற்கு முத்து, சனிக்கு நீலம் உள்ளிட்ட கற்கள் வரிசையில் புஷ்பராகம் என்ற மஞ்சள் ரத்தின கல்லை (Yelllow Sapphire) யார் அணியலாம். என்னென்ன பயன்கள் என்பதை இங்கு காணலாம்.
pushparagam stone benefits: புஷ்பராகம் என்ற மஞ்சள் ரத்தின கல்லை (Yelllow Sapphire), தைரியம் மற்றும் ஞானத்தை குறிக்கிறது. இது பிற ரத்தினங்களை விடவும் மிகவும் சக்திவாய்ந்தது. இதை சரியாக அணிந்தால் அணிந்தால், உங்கள் வாழ்க்கையில் செழிப்பு, செல்வம், நல்ல ஆரோக்கியம், புகழ் ஆகியவற்றைக் கொண்டு வர முடியும். புஷ்பராகம் வியாழன் கிரகத்தின் சக்தியைக் கொண்டுள்ளது. இதை அணிபவர்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்கிறார்கள்.
புஷ்பராகம்
புஷ்பராகம் வியாழன் கிரகத்திற்கு ஏற்ற ரத்தினக் கல்லாக கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு இந்த ரத்தினம் வரப்பிரசாதமாக அமையும். ஆனால் சிலருக்கு பேரழிவு. புஷ்பராக கல், தனுசு, மீனம், மேஷம், கடகம், விருச்சிக ராசியினருக்கு நல்ல பலனளிக்கும். இந்த ராசிக்காரர்கள் இதை அணிந்தால், அவர்களின் அதிர்ஷ்டம் பெருகும். ஜோதிடர்கள் வழிகாட்டுதல்படி குறிப்பிட்ட நாளில் நல்ல நேரத்தில் புஷ்பராகம் அணிந்து கொண்டால் முழு பலன்களையும் அனுபவிக்கலாம்.
தனுசு, மீனம், மேஷம், கடகம் விருச்சிகம் ஆகிய ராசியினர் திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வியாபார முன்னேற்றம் காண, வெளியூரில் குடிபெயர போன்ற காரணங்களுக்கு புஷ்பராகம் அணியலாம் நல்ல பலன் அளிக்கும்.
இதையும் படிங்க: முடி, நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது என்று தெரியுமா?
புஷ்பராகம் நன்மைகள்
மன அமைதியை தரும் ரத்தினமாக கருதப்படுகிறது. இந்த ரத்தினம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். புஷ்பராகம் உடல்நல பிரச்சனைகளை நீக்குகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. இதை அணிவதால் ஒருவரின் சரும பொலிவும், செல்வமும் பெருகும்.
இந்த ராசியினர் கவனம்..!
இதையும் படிங்க: ஒருபோதும் யாரிடமும் சொல்லக் கூடாத 4 விஷயங்கள்..!! நிம்மதியா சந்தோஷமா இருக்க இதை செய்யுங்க..!