லட்சுமி வாசம் செய்யும் வில்வ செடியை வீட்ல வளர்த்தால் இத்தனை பலன்களா?

By Asianet TamilFirst Published Mar 27, 2023, 10:40 PM IST
Highlights

வில்வ செடியை அல்லது மரத்தை நம் வீட்டில் வளர்ப்பதால் என்னென்னெ ஆன்மீக நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் அனைவருக்கும் வில்வ இலை என்றால் சிவபெருமான் வழிபாட்டிற்குரிய பொருட்களில் முக்கியமான பொருளாக வில்வ இலை உண்டு. மேலும் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம் தான் இந்த வில்வமரம் துன்று கூறப்படுகிறது. இது அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் திறன் பெற்ற மூலிகையாகவும் இருக்கிறது.

வில்வத்தில் இருக்கும் மூன்று பிரிவுகள் திரிசூலத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. ,கிரியாசக்தி,இச்சாசக்தி மற்றும் ஞானசக்தி என்ற மூன்று சக்திகளின் அம்சமாக இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அன்னை மகாலட்சுமி பாற்கடலில் இருந்து எழுந்தருளந்த போது அவளது கைகளில் இருந்து வில்வம் தோன்றியதாக சாஸ்திரங்களும், புராணங்களும் கூறுகின்றன.

அன்னை மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக வில்வ மரம் இருக்கிறது. வில்வ மரத்தின் ஒவ்வொரு கிளையும் வேதங்களாக பாவிக்கப்படுகிறது. தவிர அதன் இலைகள் ஒவ்வொன்றும் சிவபெருமானின் சொரூபமாகவும், அதன் வேர்கள் கோடான கோடி ருத்திரங்களாகவும் பார்க்கப்படுகிறது.

சிவனுக்கு பிரியமான வில்வத்தை வைத்து அவரை வழிபாடு செய்வதால் சிவபெருமானின் திருவருளையும், ஆசீர்வாதத்தையும் மிக எளிமையாக பெற முடியும் என்று நம் அனைவர்க்கும் தெரிந்த உண்மை.

ஆனால் அத்தகைய வில்வ செடியை நம் வீட்டில் வளர்ப்பதால் என்னென்னெ ஆன்மீக நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். துளசி மாடம் போல்,வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு ஒரு நாளும் நரகம் கிடையாது என்பது ஐதீகம். தினமும் வீட்டில் இருக்கும் வில்வ செடியை வளர்த்து பூஜை செய்பவர்களுக்கு செல்வ கடாட்சம் கிடைக்கும்.

ஒரே ஒரு வில்வ இலையை வைத்து இறைவனை பூஜிப்பது , லட்சம் தங்க மலர்களைக வைத்து பூஜிப்பதற்கு சமம் . ஏழரைச் சனியின் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து வழிபட்டு சனியின் பார்வையில் இருந்து மீள முடியும்.

வில்வமரம் வீட்டில் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம். தவிர 1000 பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். கங்கை, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடிய பலன் ஏற்படும்.  தவிர 108 சிவாலயங்களுக்கு சென்று வந்த பாக்கியத்தை பெறமுடியும்.

திருவண்ணாமலை, திருவெறும்பூர், ராமேஸ்வரம் போன்ற 30க்கு மேற்பட்ட திருக்கோவில்களில், வில்வ மரம் தல விருட்சமாக அமைந்துள்ளது. வில்வ மரத்தில் இருக்கும் பூ, இலை, பழம், பட்டை, பிசின் என்ற அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

வில்வத்தால் தினமும் வீட்டில் உள்ள சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து , சிவபெருமானின் அருளை பெற்று நெருங்க முடியும்.இத்தகைய வில்வ செடியை நீங்களும் உங்கள் வீட்டில் வளர்த்து சிவபெருமானின் ஆசியுடன் வாழ்வை வளமாக்குங்கள். 

பள்ளி முடித்து வரும் குட்டிஸ்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் 10 சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள்!

click me!