திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By Velmurugan sFirst Published Mar 27, 2023, 7:34 PM IST
Highlights

வெளிநாட்டு கரன்சி தொடர்பாக 3 ஆண்டுகளாக விளக்கம் அளிக்காத காரணத்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 கோடி அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பணக்கார மத அறக்கட்டளைகளுள் முதன்மையானதாக ஆந்திராவின் திருமலை திப்பதி தேவஸ்தானம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டதன் மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுவரை சந்தித்திடாத சூழலை சந்தித்து வருகிறது.

சமீபத்தில் பெயர் தெரியாத வகையில் ரொக்கமாக வெளிநாட்டு பணம் கோவில் உண்டியலில் போடப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி தேவஸ்தானம் அந்த பணத்தை நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சருக்கு டஃப் கொடுக்கும் மேயர் பிரியா; பள்ளி மாணவர்களுக்கு சிறு தீனி

ஆந்திராவின் திருப்பதியை தலைமையிடமாகக் கொண்ட திருமலை வெங்கடேஸ்வரா கோவில் மற்றும் 70 இதர சன்னதிகளை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம், இந்த சூழலில் இருந்து வெளிவர தற்போது அரசின் தலையீட்டை நாடியுள்ளது. ஆனால், அரசின் பதிலுக்காக காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் திருப்பதி தேஸ்தானத்திற்கு அபராதம் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை; 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

இந்நிலையில் வெளிநாட்டு பணம் தொடர்பாக 3 ஆண்டுகளாக விளக்கம் தராதக் காரணத்தால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 3.29 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேஸ்தான குழு தலைவர் கூறுகையில், ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

click me!