சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் சேலம் மாநகரப் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த கோவில் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர சிற்றரசர்களால் கட்டப்பட்டு காவல் தெய்வமாக திருமணிமுத்தாற்று கரையோரத்தில் வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது சேலம் மாவட்ட மக்களால் காவல் தெய்வமாக வழிபட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கருவறை சிறியதாகவும், சேதமடைந்தும் காணப்பட்டதால் இந்த கோவிலை புனரமைத்து தரவேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கோவில் திருப்பணிகளுக்கு 4.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கோவில் திருப்பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது. கோவில் வளாகத்தில் ஆகம விதிகளின்படி பழமை மாறாமல் புதிதாக பல்வேறு அழகிய சிற்பங்களுடன் கூடிய கருவறை கட்டப்பட்டுள்ளது.
கைக்குழந்தையுடன் வீட்டு வாசலில் நின்ற பெண்ணை முட்டி துரத்திய பசு; வீடியோ வெளியாகி பரபரப்பு
இந்த கருவறை மேற்கு கூறையை 16 தூண்கள் தாங்கி நிற்கின்றன. அனைத்து தூண்களிலும் விநாயகர், முருகன், பல்வேறு அம்மன்களின் உருவ சிலைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் மூலஸ்தான கோபுரத்திலும் பல்வேறு அம்மன் உருவசிலைகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு வாசல் அருகே 21 அடி உயர அம்மன் சிலை பக்தர்களை மெய்சிலிர்க்கும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி 23யாக குண்டங்கள், 16 கலசங்கள் அமைக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் 45 பேர் மூலம் யாக சாலை பூஜையை நடத்தினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இன்றைய தினம் அதிகாலை முதல் 4-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. தற்போது ராஜகோபுரம், கருவறை, பரிவார சன்னதி மற்றும் கொடி மரத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.இதைதொடர்ந்து மகாகணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதுதொடர்ந்து மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜஅலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம் போன்ற பல்வேறு வைபங்களும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா நடைபெறும்போது கோபுரத்தின் மீது ஊற்றப்பட்ட புனிததீர்த்தம் மோட்டார் மூலம் பக்தர் மீது தெளிக்கப்பட்டதுஇந்த விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு,சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன்,சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் தங்கத் தேரோட்டத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க உள்ளார். கடந்த 1993 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பெரிய மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டப்பட்டபோது, குடமுழுக்கு விழா நடைபெற்றது.அதனை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடமுழக்கு விழா நடைபெற்றதால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனர்.
தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி பணம் பறித்த விவகாரம்; ஐபிஎஸ் பிரமோத்குமார் நீதிமன்றத்தில் சரண்
இதனிடையே பக்தர்களின் வசதிக்காக சேலம் மாவட்ட நிர்வாகம் இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும், அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த பிரத்தியேகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாநகர காவல் துறை சார்பில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடமுழுக்கின் போது கூட்டநெரிசலை தவிர்க்க திருக்கோவில் சுற்றி நான்கு இடங்களில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யவும், கோபுர கலசங்களுக்கு ட்ரோன் மூலம் மலர் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.30 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதால் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.