லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரனை வதம் செய்த முத்தாரம்மன்

By Dinesh TG  |  First Published Oct 6, 2022, 10:13 AM IST

புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா மகிசாசூரசம்காரம் இன்று கோவில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க கோலாகலமாக நடைபெற்றது.


உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா  வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தினமும் இரவு அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூரசம்காரம் இன்று அதிகாலை கோவில் கடற்கரையில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் வீடு, வீடாக சென்று பெற்ற காணிக்கையை இன்று கோவில் உண்டியலில்  செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

Tap to resize

Latest Videos

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி உற்சவ விழா; 108 வீணை இசை வழிபாடு

மகிசாசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து அதிகாலை 12 மணிக்கு அம்மன் மஹிஷா சூரமர்தினி கோலத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரை வந்தார். முதலில் தன் முகத்துடன் இருந்த மஹிஷாசூரனை அம்மன் வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமாக உருவம் பெற்றவனையும் வதன் செய்தார். தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூயனையும், முடிவில் சேவல் உருவமாக மாறிய மஹிசாசூரனையும் வதம் செய்தார். 

ராஜராஜ சோழன் எந்த மதம்? டக்கென பதில் சொன்ன கமல்ஹாசன்... என்ன சொன்னாரு தெரியுமா?

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர்.  இந்த நிகழ்ச்சியில் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 48 இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். பக்தர்கள் வசதிக்காக சுமார் சிறப்பு 250 பேருந்துகள் இயக்கப்பட்டது.

click me!