கிருஷ்ணர் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பி பார்க்கலாம்
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ணர் அவதாரம். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று தேய்பிறை நட்சத்திரத்தில் கம்சனின் சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் – தேவகிக்கு மகனாக பிறந்தார் கிருஷ்ணர். அவர் இந்த பூமியில் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கண்ணன், கேசவன், கோவிந்தன், கோபாலன் என பல பெயர்களால் கிருஷ்ணனை மக்கள் அழைக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பி பார்க்கலாம்
கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7-ம் வயதில் கோபியர்களுடனும், 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது கிருஷ்ணருக்கு 7 வயது தான்.
undefined
கிருஷ்ண ஜெயந்தி 2023 : உங்க வீட்டில் கிருஷ்ணரை இப்படி வழிபடுங்க.. செழிப்பு உண்டாகும்..!!
கிருஷ்ணருக்கு மொத்தம் 16,008 மனைவிகள் உள்ளனர். எனினும் அவர்களுல் 8 மனைவிகள் முதன்மையானவர்கள். அவர்கள் ருக்மணி, சத்யபாமா, சாம்பவதி, நக்னசிந்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமனை, பத்தரை ஆவர்
நரகாசுரனின் மாளிகையில் 16,100 பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர். நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த பின்னர் அந்த பெண்களை அவர்களின் குடும்பம் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அவர்கள் அனைவரையும் ஒரே நாளில் கிருஷ்ணர் மணந்தார். அந்த பெண்கள் திருமணமான பெண்களின் அந்தஸ்தை பெற்று மீண்டும் சமுதாயத்தில் மரியாதை உடன் வாழ முடியும் என்று கருதி கிருஷ்ணர் பல உருவங்களாக பிரிந்து அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த குருஷேத்திர போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு, தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜூனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்த போருக்கு முன்பு அர்ஜுனன் உடன் நடத்திய உரையாடலே பகவத் கீதையாக மாறியது.
கிருஷ்ணர் இளம் வயதில் கோகுலத்தில் வளர்ந்ததால், கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி என்றூம் அழைக்கப்படுகிறது.
சிவபெருமானிம் அம்சத்துடன் குழந்தை வேண்டும் என்று கிருஷ்ணர் சிவனிடம் வரம் கேட்டார். சிவபெருமானம் அந்த வரத்தை அளிக்க கிருஷ்ண – சாம்பவதி தம்பதிக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சாம்பன் என்று அறியப்படுகிறது.
கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது தனது பக்தரான உத்தவரின் வேண்டுதலை ஏற்று அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதுதான் உத்தவ கீதை என்று அழைக்கப்படுகிறது.
கிருஷ்னர் ஒருமுறை பிரபாச பட்டினத்தில் காட்டில் அமர்ந்திருந்த போது. வேடனின் அம்பு கிருஷ்ணரின் காலில் தாக்கியதால் அவர் உடலை பூவுலகில் விட்டு வைகுண்டம் எழுந்தருளினார்.
கோகுலத்தில் இளம் வயதில் கிருஷ்ணர் கோபியர்களுடன் சேர்ந்து விலையாட்டுகளில் ஈடுபட்டதை ராசலீலா என்று அழைப்பர். இன்றும் இந்த ராசலீலா நாடகம் நடத்தும் வழக்கம் வட இந்தியாவில் உள்ளது.
பெண்கள் கண்ணனை மனம் உருகி வழிபட்டால் திருமண தடை நீங்கும்
விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.
தொழிலதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கிடைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து கண்ணனை வழிபட்டால் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.