இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? நல்லதா, கெட்டதா?

By Ramya s  |  First Published Sep 5, 2023, 8:02 AM IST

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா அல்லது கெட்டதா என்று நம்மில் பலரும் யோசித்திருப்போம்.


கனவு என்பது இந்த உலகில் உள்ள அனைவருக்குமே பொதுவான நிகழ்வு. அவ்வப்போது நமது ஆழ்மனதில் உள்ள எண்ணங்களே கனவுகளாக வெளிப்படுகின்றன.  ஒரு சம்பவத்தின் அல்லது ஆசையின் அல்லது உணர்வின் நிகழ்வாகவும் கனவு இருக்கலாம். சிலருக்கு புதிது புதிதாக கனவு வரும். சிலருக்கு கெட்ட கனவுகள் வரும். எனினும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. பெரும்பாலும், நம்முடைய மறைந்த முன்னோர்கள் தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா என யாராவது ஒருவர் நம் கனவில் வருவார்கள். அப்படி இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா அல்லது கெட்டதா என்று நம்மில் பலரும் யோசித்திருப்போம். பொதுவாக இறந்தவர்கள் கனவில் வந்தால் நம்மிடம் எதையோ சொல்லப்போகிறார்கள் என்று அர்த்தம்.

துக்கம் மற்றும் தீர்க்கப்படாத உணர்ச்சிகள் காரணமாகவும் இறந்தவர்கள் கனவில் வரலாம். ஒரு நபரிடம் விடைபெறுவதற்கான வாய்ப்பாக கனவு வரலாம். இறந்தவர் கனவில் வந்தால், இறந்தவர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தியை தெரிவிக்க விரும்புகிறார் என்றும் அர்த்தம். உதாரணமாக, இறந்த நபர் தனது வாழ்க்கையில் சில சூழ்நிலைகளைப் பற்றி கனவு காண்பவரை எச்சரிக்க விரும்பலாம். 

Tap to resize

Latest Videos

இந்த கனவுகள் மாற்றம், புதிய தொடக்கத்தின் அடையாளமாக இருக்கலாம். ஒரு நபரின் கனவில் இறந்த நபர் வந்தால், விரைவில் வாழ்க்கையின் ஒரு புதிய கட்டம் தொடங்கப் போகிறது என்று அர்த்தம். அவர்களின் ஆளுமைகள், , தொழில் அல்லது தனிப்பட்ட உறவுகளில் புதிய மாற்றம் இருக்கலாம். ஒரு கனவில் இறந்த நபரை உயிருடன் பார்ப்பது, அந்த நபரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அல்லது அவர் இன்னும் உயிருடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை குறிக்கலாம்.

வாஸ்து படி வீட்டில் ஃபீனிக்ஸ் பறவை படத்தை இப்படி வையுங்க..வீட்டில்  மகிழ்ச்சி செழிப்பு வரும்..!!

இறந்தவர்கள் கனவில் வந்தால் விரைவில் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். மேலும் கனவில் இறந்தவர்கள் ஆசி வழங்கினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று அர்த்தம். ஆனால் இறந்தவர்கள் அழுவது போல் கனவு வந்தால் அது நல்லதல்ல. இந்த கனவு வந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது நல்லது.  இறந்தவர்கள் உங்களுடன் பேசுவது போல் கனவு வந்தால் உங்களின் பெயர் புகழ் அதிகரிக்கும். இறந்தவர்கள் உங்கள் வீட்டில் சாப்பிடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு நற்புகழும் செல்வ செழிப்பும் உண்டாகும். 

click me!