ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகு விமரிசையாக நடைபெற்ற கோவை தேர் திருவிழா

By Velmurugan s  |  First Published Mar 2, 2023, 10:44 AM IST

கோவையில் கோனியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


13 நூற்றாண்டில் கட்டப்பட்ட கோனியம்மன் கோவிலின் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும். கடந்த மாதம் 21ம் தேதி திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அக்னிச்சாட்டு, பெண்கள் கொடி மரத்திற்கு நீரூற்றுதல் நடைபெற்றத. திருவிழா நாட்களில் தினமும் அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம் ஆகியவற்றில் திருவீதி உலா வந்தார். 

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி முன்னிலை

Latest Videos

undefined

முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று ராஜவீதி தேர் நிலை திடலில் இருந்து  புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, வைசியா வீதி வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து அடைந்தது.  இந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி கோஷ்டத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் திருவிழாவை முன்னிட்டு கோவை நகரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.  தேர் திருவிழாவை முன்னிட்டு கோனியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதி உட்பட ஒப்பணக்கார வீதி ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

click me!