ஆண்டுதோறும் கோவையை அருகே காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்யப்படுவது வழக்கம்.
கோவையில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மனுக்கு லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் கோவையை அருகே காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்யப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள 100, 200, 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுகொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட அலங்காரத்தை பொதுமக்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆண்டுக்காண்டு அலங்காரம் செய்யப்படும் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பும் அதிகரித்திக் கொண்டே வருகிறது.
ஆனால் இந்தாண்டு தேர்தல் காரணமாக லட்ச ரூபாய் மதிப்பில் மட்டும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தனலட்சுமி பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பிறகு அந்தந்தப் பகுதி பொது மக்களுக்கு அந்த நோட்டுக்கள் திருப்பி அளிக்கப்படும். சென்ற ஆண்டு ஆறு கோடி ரூபாய் பணமும், வைரம் தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.