Thiruthani Murugan Temple: திருத்தணி முருகன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!

By vinoth kumarFirst Published Apr 14, 2024, 12:38 PM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்ற நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு இன்று காலை மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை திருவிழா தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் பத்து நாள் நிகழ்ச்சி தொடங்கியது.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இக்கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்ற நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு இன்று காலை மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையும் படிங்க: மீனத்தில் ராகு குரு சேர்க்கை.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி அமோக காலம்..

இதனை தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு அதிகாலை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. 

சித்திரை திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான் காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த பத்து நாட்களில் புலி வாகனம், யானை வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி மயில் வாகனம் போன்ற வாகன சேவைகளில் எழுந்தருளி திருக்கோயில் மாட வீதியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குரு பெயர்ச்சி பலன்கள் 2024 : இந்த 4 ராசிகளுக்கு பொன்னான நாட்கள் ஆரம்பம்..! எப்போது தெரியுமா..?

click me!