
Kakkalur Sree Jalanarayanan Temple : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூரில் உள்ள கோயில் தான ஸ்ரீ ஜலநராயணன் கோயில். சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு அர்ப்பக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு தல விருட்சமாக இருப்பதால் இந்தக் கோயிலானது சிவ விஷ்ணு கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
கோயில் அமைப்பு:
கோயிலின் நுழைவு கோபுரம் பெரியதாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்த உடன் காவல் தெய்வங்கள் உள்ளன. இதில் இடதுபுறம் விநாயகரும் அவரைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமியும் வீற்றிருக்கின்றனர். அதன் பின்னர் பாமா மற்றும் ருக்மணி என்று தனது 2 மனைவிகளுடன் கிருஷ்ண பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கிருஷ்ணர் சன்னதிக்கு பின்புறம் ராமர், சீதா தேவி, லட்சுமணன் ஆகியோருடன் ஆஞ்சநேயர் இருக்கிறார். அதன் பின்னர் புஷ்பவனேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
சிவனும் விஷ்ணுவும் இணைந்தே அருளும் அற்புத தளம்! காக்களூர் ஸ்ரீ ஜலநாராயணன் கோயிலின் மகிமை!
சிவன் சன்னதியை சுற்றிலும் விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளன. சிவன் சன்னதியை ஒட்டியவாறு ஜலநாராயணன் சன்னதி உள்ளது. இந்த பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் சேஷ வாகனத்தில் தனது மனைவியுடன் அருள் பாலிக்கிறார். இதன் மூலமாக அவர் வைகுண்டத்தில் இருப்பதாக ஐதீகமாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் மட்டும் சிவன் மற்றும் விஷ்ணு இருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்த பாக்கியம் கிட்டும். இக்கோயிலில் மட்டும் 44 சன்னதிகள் இருப்பது தனி சிறப்பாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலானது சென்னையிலிருந்து 46 கிமீ தொலைவிலுள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அருகில் 2 கிமீ தூரத்திலும், புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து 2.5 கிமீ தூரத்திலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது.
பக்தனுக்காக நந்தி பகவானை வழிபட செய்த சிவன் – 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேகம்!