குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி படாமல் இருக்க கட்டாயம் கண்மை வைக்கணுமா? உண்மை பின்னணி என்ன?

By Pani MonishaFirst Published Jan 17, 2023, 12:46 PM IST
Highlights

Kajal Safe For Newborn Babies: குழந்தைகளை கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்க பெற்றோர் கண்மை வைக்கிறார்கள். அதன் பின்னணியில் இருக்கும் மத, அறிவியல் காரணங்களை அறிந்து கொள்வோம். 

கிராமப்புறங்களில் மட்டும் இல்லாமல் நகர்புறங்களிலும் குழந்தைக்கு கண்களில் மை வைப்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது தீய கண்களிடமிருந்து தங்கள் குழந்தைகளை காக்கும் என நம்பப்படுகிறது. சில பெற்றோர் தங்களுடைய குழந்தைகளின் கண்கள் பெரியதாகவும், அழகாகவும் தெரிய வேண்டுமென கண்மை பூசுகின்றனர். 

கண்மையால் பொட்டு வைக்காத இந்திய குழந்தைகளை காண்பது அரிது. குழந்தைகளை குளிப்பாட்டி அந்த பட்டு கன்னத்திலும், நெற்றியிலும் கண்மை வைத்து பவுடர் பூசுவது வழக்கமாகிவிட்டது. முகம் மட்டும்தானா என்றால் இல்லை கை, கால்களில் கூட வைப்பார்கள். இப்படி வைப்பது உண்மையில் குழந்தைகளை கண் திருஷ்டியில் இருந்து காக்குமா? அதில் ஏதேனும் அறிவியல் காரணம் உள்ளதா? என்பதை இங்கு காணலாம். 

கண் திருஷ்டி என்பதை மதரீதியாக பார்த்தால் தீய கண்களின் பார்வையை தான் அப்படி குறிப்பிடுவார்கள். ஒரு நபர், யாராவது ஒருவருக்கு தீங்கு செய்ய நினைத்தாலோ அல்லது ஒருவருக்கு தீங்கு செய்ய முயன்றாலோ, அந்த நபரின் பார்வையில் ஒரு துவேஷம் எழுகிறது. இது எதிர்மறையானது. இதனால் தோஷம் உண்டாகிறது. தீய எண்ணம் கொண்ட நபரின் கண்களில் உருவாகும் எதிர்மறை சக்தி, அவர் மற்றவரை பார்க்கும்போது அவரை தாக்குகிறது. இதைத் தான் கண் திருஷ்டி என்கின்றனர். 

எதிர்மறை ஆற்றலுடன் போராடும் கண்மை 

அறிவியலின்படி, தீய பார்வை எதிர்மறையுடன் தொடர்புடையது. இதற்கு பிறரை பலவீனப்படுத்தும் எதிர்மறை ஆற்றல் என்று பொருள். கண்மையை பயன்படுத்துவதற்கான மதப் பகுத்தறிவு என்பது குழந்தைகள் மிக விரைவாக தீய பார்வையை பெறுகிறார்கள், அதை நீக்க வேண்டும் என்பதாகும். கருப்பு நிறம் சாதகமில்லாதது, எதிர்மறை ஆற்றல்களின் குறியீடு. இது எதிர்மறை சக்தியை அகற்றுவதில் நன்கு செயல்படும். 

முள்ளை முள்ளால் எடு என்பது போல கருப்பு நிறம் எதிர்மறை ஆற்றலை குறைத்து குழந்தையின் மீதான கெட்ட பார்வையை குறைக்கிறது. அது மட்டுமின்றி கருப்பு நிறம் ராகு தோஷத்தை குறைக்கும். அதோடு சனியின் விருப்பமான நிறமும் கருப்பு என்பதால் சனி பகவானின் ஆசீர்வாதம் எப்போதும் குழந்தை மீது இருக்கும். 

அறிவியல்பூர்வமானதா? 

ஒவ்வொரு மனித உடலிலும் மின்னணு காந்த கதிர்வீச்சு உள்ளது என விஞ்ஞானம் கூறுகிறது. ஆனாலும் மின்காந்த கதிர்வீச்சு ஆற்றல் பெரியவர்களை விட குழந்தைகளில் மிக குறைவாக உள்ளது. அதனால் குழந்தைகளிடம் உள்ள கதிர்வீச்சு தீய கண்களால் மிக விரைவாக பாதிக்கப்படும். இதனால் தான் சிலர் குழந்தையை பார்த்த பிறகு, சிலர் குழந்தைகள் அருகே வந்ததும் குழந்தையின் ஆரோக்கியம் மோசமடையத் தொடங்குகிறது. 

இதையும் படிங்க: Sugarcane benefits: பொங்கல் அப்போ சாப்புடுற கரும்புல இவ்வளவு நன்மையா? இது தெரிஞ்சா கட்டாயம் சாப்பிடுவீங்க!

இல்லையெனில், குழந்தையின் மனதில் ஒரு விசித்திரமான பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக குழந்தையின் இயல்பான நடத்தையில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் கருப்பு நிறம் உடலில் இருக்கும் எலக்ட்ரானிக் காந்தக் கதிர்வீச்சை வலுப்படுத்துவதாக அறிவியலில் கூறப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் கண்மை வைக்க பழகியுள்ளனர் போலும். உண்மையில் தீய கண் பார்வையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கண்மை உதவுவதாக நம்பப்படுகிறது. 

ஆனாலும் மருத்துவர்கள் இதை ஏற்க மறுக்கிறார்கள். கண்மையில் இருக்கும் ஈயம் குழந்தையின் கண்களில் அரிப்பு, எரிச்சலை உண்டாக்கும். சில தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும் என்பதால் கண்களில் மை வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: வாயு தொல்லைக்கு நொடிகளில் தீர்வு! பண்டிகை கால அஜீரண கோளாறு நீங்க இதை சாப்பிட்டா போதும்..

click me!