வீட்டில் குபேரன் பொம்மையை வைத்தால் அனைத்து பிரச்சினைகளும் நீக்கி செழிப்பையும், செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
பொதுவாகவே செழிப்பு, முன்னேற்றம், செல்வம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற குபேர பொம்மை வீட்டில் வைக்கப்படுகிறது. ஆனால், செல்வத்தைப் பார்க்க இந்த பொம்மையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது.
புத்த மதத்தை பின்பற்றுவர் இந்த பொம்மையை கடவுளாக வணங்கி வருகின்றனர். "சிரிக்கி புத்தர்" தான் இந்த பொம்மையின் உண்மையான பெயர். இந்த குபேரன் பொம்மை ஆனது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவும் துரதிஷ்டத்தை நீக்கவும் உதவுகிறது. மேலும் இந்த சிரிக்கும் பொம்மையின் தோற்றமானது நமக்குள் இருக்கும் மன அழுத்தத்தை நீக்கி சந்தோஷத்தை தருகிறது. குபேரனின் பொம்மையானது அனைத்து தொல்லைகளையும் மாற்றி செழிப்பையும் செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. சில வீடுகளில் தொடர்ந்து வரும் சண்டை சச்சரவுகள், அமைதியின்மை போன்றவற்றுக்கு தீர்வாக குபேரர் பொம்மையை பலர் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: குபேரன் "செல்வத்தின்" கடவுளான கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
வீட்டில் குபேர பொம்மையை சரியான திசையில் வைப்பது எதிர்பாராத செழிப்பை தரும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிரி மறைந்து விடும். வேலை செய்யும் இடத்தில் வைத்தால் வேலையில் சுபிட்சமும் வருமானமும் அதிகரிக்கும். குழந்தைகள் படிக்கும் மேசைக்கு மேலே வைத்தால், பெரும் கல்விப் பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் சோம்பேறித்தனத்தை மாற்றி படிப்பில் நல்ல கவனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே, குபேர பொம்மையை எந்த திசையில் அதிக பலன்களை தரும் என்பதை பார்க்கலாம். கிழக்கு திசையை நோக்கி வைப்பது நல்லது என்பது ஐதீகம். இந்த திசையை எதிர்கொள்ளும் குபேர பொம்மை மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிதி செழிப்புக்கு உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: வீட்டில் குபேர விளக்கை 'இந்த' முறையில் ஏற்றி வழிபடுங்கள்... செல்வ வளம் பெருகும்..!!
குபேர பொம்மையை வடக்கு திசை நோக்கியும் வைக்கலாம். இதன் விளைவாக, உங்கள் வீட்டில் செழிப்பு, செல்வம் மற்றும் அமைதி கிடைக்கும். இதனால் உங்கள் வழியில் வரும் எல்லாவற்றிலும் வெற்றியை அடைய உதவும்.
அதுபோல் நீங்கள் படுக்கும் அறை அல்லது உணவு சாப்பிடும் இடத்தில் தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்ப்பறாத அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும் வீட்டின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்பது ஐதீகம். மேலும் இதனை நீங்கள் பிறருக்கு காணிக்கையாக கொடுத்தாலும் பலன் தரும் என்பது நம்பிக்கை. குபேர சிலையை பரிசளிப்பது, பரிசளிப்பவர் மற்றும் பெறுபவர் இருவருக்கும் நல்ல பலனைத் தரும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒரு சாதாரண பொம்மைக்கு இவ்வளவு சக்தியா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை. எப்படியெனில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த பொம்மையை நீங்கள் பார்க்கும் போது உங்களை அறியாமலையே உங்களுக்குள் ஒரு ஆனந்தம் வரும். மன அழுத்தம் குறையும். இதுவே இந்த பொம்மையில் இருக்கும் அற்புத சக்தியின் ரகசியம்!!