அக்ஷய பாத்திரத்தில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம், நம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
பல வீடுகள். அல்லது பெரிய கடைகளிலும், நிறுவனங்களிலும், வரவேற்பறையில் பெரிய உருளியில் அதாவது அக்ஷய பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி, வண்ண மலர்களால் அலங்கரித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இது அலங்காரத்திற்கு மட்டும் வைக்கப்படுவதில் அதில் மிகப்பெரிய ரகசியமும் அடங்கி உள்ளது. மேலும் இந்த அக்ஷ்ய பாத்திரத்தில் மேலும் சில விஷயங்களைச் சேர்க்கும்போது அது இருக்கும் இடத்தில் பண மழை கொட்டும் என்று நம்பப்படுகிறது.
அக்ஷய பாத்திரம் என்பது அள்ள அள்ள குறையாத பாத்திரம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த அக்ஷ்ய பாத்திரத்தில் இருந்து எதை எடுத்தாலும் அது குறையாமல் மீண்டும் நிரப்பிக் கொண்டே இருக்கும் என்கிறது புராணங்கள். இதன் காரணமாகவே அக்ஷ்ய பாத்திரம் என்பது குபேரனின் பாத்திரமாக கருதப்படுகிறது. அத்தகைய அக்ஷய பாத்திரத்தில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம், நம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
எனினும் இன்றைய காலக்கட்டத்தில் யாரும் அக்ஷய பாத்திரத்தை சரியான முறையில் பராமரிப்பதில்லை. காரணம், அதில் உள்ள தண்ணீரை நீண்ட நாட்கள் மாற்றாமல் இருப்பது, அதில் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தாமல் எந்த தண்ணீரை வேண்டுமானாலும் ஊற்றுவது, அதில் இயற்கையான பூக்களை போடாமல், செயற்கையான பிளாஸ்டிக் பூக்கள் போடுவது என பல தவறுகளை செய்கின்றனர். எனவே அக்ஷ்ய பாத்திரத்தில் எப்படி தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பார்க்கலாம்.
சுத்தம் செய்யப்பட்ட அக்ஷய பாத்திரத்தில் சுத்தமான குடிநீரை மட்டுமே பிடிக்க வேண்டும். பிறகு அதனுடன் பன்னீர் ஊற்ற வேண்டும். அடுத்து அதில் சிறிது ஏலக்காய் விதைகளை போட வேண்டும். பிறகு அதில் ஒரு கைப்பிடி துளசி இலைகளை வைத்து அதன் மேல் பன்னீர் ரோஜா அல்லது மல்லிகைப் பூவை வைக்கவும். நறுமணம் கொண்ட பூக்களை மட்டுமே அதில் பயன்படுத்த வேண்டும்.
இந்த பாத்திரத்தை வீட்டின் வடகிழக்கு மூலையிலோ அல்லது வரவேற்பறையிலோ வைக்க வேண்டும். அதில் உள்ள தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பழைய தண்ணீர் மற்றும் பூக்களை செடிகளுக்கு ஊற்ற வேண்டும். .இதை செய்வதால் நம் வீட்டில் குபேரன், மஹாலக்ஷ்மியின் அருள் கிடைப்பதோடு, செல்வம் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.