தேங்காய் உடையும் விதத்தை வைத்து என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தெய்வ வழிபாட்டில் தேங்காய் உடைப்பது என்பது பொதுவான நடைமுறை.. ஆனால் தேங்காய் உடையும் விதத்தை வைத்து சாதக பலன்கள் கூறப்படுவதுண்டு. ஆனால் விநாயகருக்கு தேய்காய் உடைக்கும் போது சகுனம் பார்க்க தேவையில்லை. மற்ற தெய்வங்கலை வழிபடும் போது தேங்காய் உடையும் சகுனம் மிகவும் முக்கியம். ஏதேனும் விஷேஷம் அல்லது முக்கிய விரதநாட்கள் அல்லது பண்டிகைகளில் தேங்காய் உடைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் கோயிலுக்கு தேங்காய் வாங்கி செல்லும் போது அந்த தேங்காய் அழுகி இருந்தால் நாம் நினைத்த காரியம் கைகூடாது என்று பலரும் பயப்படுவார்கள்.. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. நாம் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சற்று கால தாமதம் ஆகும். அவ்வளவு தான். சரி.. தேங்காய் உடையும் விதத்தை வைத்து என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தேங்காய் உடையும் பலன்கள்
undefined
தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்
ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்
சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும்
மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும்
ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும்
உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்
நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்
முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம் ஏற்படலாம்
முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு கூறுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும்
சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு & ஆபரண லாபம் உண்டாகும்
ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம்
வெற்றியை தரும்.
கெட்ட கனவுகளுடன் தூக்கமில்லாத இரவுகளா? இப்படி செய்யுங்க தொந்தரவு இல்லாமல் தூங்குவீங்க..!!
அதே போல் தேங்காய் உடைக்கும் போது, தேங்காயின் சிறிய பாகம் அதனுள் விழும். இப்படி தேங்காய்க்குள் தேங்காய் விழுந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கபோகிறது என்று அர்த்தம்.
தேங்காய் உடைக்கும் போது அதில் பூ விழுந்தால், உங்கள் ஆசை மற்றும் கனவுகள் நிறைவேறும் என்று அர்த்தம்.
எனவே தேங்காய் உடைக்கும் போது பொறுமையாக, நேர்த்தியாக உடைக்க முயற்சி செய்யும். நல்லதே நடக்கும்