Aadi Month Theipirai Panchami 2024 : இன்று ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதி. இந்நாளில் வாராஹி அம்மனை எப்படி வழிப்பட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் வரும் பஞ்சமி வழிபாடு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. திதிகளில் வரும் ஐந்தாவது திதி தான் பஞ்சமி. பஞ்சமி திதி என்றால் எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது வாராஹி அம்மன் தான். வாராஹி அம்மன் பார்ப்பதற்கு உக்கிரமாக இருக்கும். ஆனால், இளகிய மனம் கொண்டவள். பக்தர்கள் கேட்கும் வரங்களை கொடுக்கக் கூடியவள்.
ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை பஞ்ச திதியானது வாராஹி அம்மனை உரிய நாளாகும். இந்நாளில் , வாராஹி அம்மனை வழிபட்டால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், இந்த ஆண்டு தேய்பிறை பஞ்சமி இன்று (ஜூலை.25) கொண்டாடப்படுகிறது. இந்நாளில், வாராஹி அம்மனுக்கு எளிமையான முறையில் விளக்கேற்றி வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும் மற்றும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்த வழிபடாக கருதப்படுகிறது.
undefined
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பஞ்சமிகள் உண்டு. இவற்றில் செய்யும் தொழில், நன்மைகள் பெருக வேண்டுமென்று நினைப்பவர்கள் வளர்பிறை பஞ்சமியிலும்... துன்பங்கள், கஷ்டங்கள், குழப்பம் போன்றவை நீங்க தேய்பிறை பஞ்சயிலும் வழிபட வேண்டும்.
இதையும் படிங்க: ஆடி கிருத்திகை 2024 எப்போது..? இந்த நாள் முருகனுக்கு ஏன் சிறப்பு ..?
ஆடி தேய்பிறை பஞ்சமி:
இன்று ஆடி மதம் தேய்பிறை பஞ்சமி. எனவே, இந்நாளில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வராகி அம்மன் கோவிலுக்கு சென்று வாராஹி அம்மனுக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் சேலை வாங்கி சாற்றவும். ஒருவேளை உங்கள் வீட்டிற்கு அருகில் வாராஹி அம்மன் கோவில் இல்லை என்றால் வீட்டில் வாராஹி அம்மன் படத்தை வைத்து வழிபடும்.
இதையும் படிங்க: Aadi Krithigai Viratham 2024 : வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுக்கும் ஆடி கிருத்திகை விரதம்!
வீட்டில் வாராஹி அம்மனை வழிபடும் முறை:
ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதியானது இன்று (ஜூலை.25) காலை 8.41 மணிக்கு தொடங்கி, நாளை (ஜூலை.26) காலை 6.10 வரை இருக்கும். ஆகவே, இந்த நேரத்தில் வாராஹி அம்மனை வழிபட்டால், உங்களது வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும், எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கும், செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
இன்று ஆடி மாதம் தேய்பிறை திதி என்பதால், வீட்டில் பூஜை அறையில் ஒரு தட்டில் ஒரு கைப்பிடி அளவுக்கு கல் உப்பை எடுத்து நன்கு பரப்பிக் கொள்ளுங்கள். பிறகு, உப்பின் மேல் ஒரு செம்பருத்தி இலையை வைக்கவும். பிறகு அதன் மீது ஒரு விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி வாராஹி அம்மன் படத்திற்கு முன் தீபம் ஏற்றுங்கள். இந்த விளக்கானது சுமார் ஒரு மணி நேரமாவது கண்டிப்பாக எரிய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாராஹி அம்மனுக்கு நைவேத்தியமாக பூமிக்கு அடியில் விளையும் எந்த ஒரு பொருளையும் கொடுக்கலாம். பழங்களில் மாதுளை பழம் வாராஹி அம்மனுக்கு விருப்பமான பழமாகும். அக்கம் பக்கத்தில் இருக்கு கொடுங்கள். ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனுக்கு இப்படி விளக்கேற்றி வழிபட்டால் உங்களுக்கு வேண்டிய வரத்தை தருவாள், உங்களது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும், வீட்டில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D