
உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை ஆய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை.
ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதாகும்.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!
என்கிறார் திருமூலர்.
இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரோ,
‘‘மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே’’ என்கிறார்.
ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.
ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா.. என்று உங்கள் மனதில் நினைக்கலாம் சித்தர்கள் குறித்து இயல்பாகவே கேள்வி எழலாம். மனித வாழ்க்கை துயரம் நிறைந்தது. அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர் அனுபவிக்க வேண்டும் என்பது விதி. கர்ம வினைகளில் இருந்து எந்தவொரு மனிதனும் தப்பிக்க முடியாது. அவ்வாறு அனுபவிக்கும்போது ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட அவனுக்கு யார் உதவுவார்கள்? இதுபோன்ற நேரங்களில் மனிதர்களுக்கு சித்த புருஷர்கள் மட்டுமே உதவுவார்கள்.
சித்தர்களுக்கு மனிதர்களிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தர்களின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
சிவனின் தலையில் கங்கை இருக்க என்ன காரணம் தெரியுமா?
நமக்கு தெரிந்ததெல்லாம் வெறும் 18 பேர் சித்தர்கள்தான். உண்மையில், பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் இந்த உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள்; இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக் கேற்ப உதவத் தயாராக உள்ளார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல எண்ணம், நல்ல செயல்களுடன் கூடிய தூய்மையான வாழ்க்கை வாழ்வதுதான்.
ராகு கேது தோஷம் இருக்கா.. இதை செய்யுங்க!
சித்தர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் நல்ல தகுதி வேண்டும். தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து வாழ்க்கை கடமையாற்றும் சாதாரணமானவர்களுக்கும் சித்தர்களின் அருள் தரிசனம் நிச்சயம் கிட்டும். சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடம் தேடிச் சென்று வணங்குவோம். நல்ல பலன்களைப் பெறுவோம்.