சொர்ணபுரீஸ்வரர் கோவில் இருக்கும் இறைவனை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
கூகையூர் 'சொர்ணபுரீஸ்வரர் கோவில்' பற்றி கேள்விப்பட்டு இருக்கிங்களா! இது சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் இருக்கிறது. ஆகாய தலமாக இந்த கோவில் போற்றப்படுகிறது. முக்கியமாக திருநாவுக்கரசர் இந்த திருத்தலத்தை பற்றி பாடியதால் இதனை இன்னொரு ‘சிதம்பரம்’ என்று அழைப்பர்.
முதலில் இந்த கோயிலானது கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்டது. அதன் பின்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184ஆம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் இந்த கோவிலை கற்கோவிலாக மாற்றிக் கட்டினார்.
undefined
கூகையூரில் வியாழ பகவானுக்கு சிவன் தரிசனம்:
ஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருக்கும் போது, தேவர்களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். ஆனால் இந்திரன் அவருக்கு எழுந்து நின்று அவரை வரவேற்கவில்லை. இதனால் கோபம் அடைந்த வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது. மேலும் அவரது சாபத்தால் இந்திரசபை பொலிவிழந்து காணப்பட்டது.
இதையும் படிங்க: Navagrahas: மனிதனை ஆட்டிப்படைக்கும் நவகிரகங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இப்படி நடந்ததால் தனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானிடம் மன்னிப்பு கேட்க அவரை பல இடங்களில் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத வகையில் தன்னை
மாற்றிக்கொண்டார். பின் மன வருத்ததில் வனாந்தரத்தில் வாசம் செய்த போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இறைவனை, வேண்டினார். அப்போது அவருக்கு
சிவபெருமான் தரிசனம் ஆனார். பிந் அங்கு வந்த இந்திரன் தன் தவறை வியாழ பகவானை வணங்கினார். இதனை அடுத்து இந்திரசபை சாபத்தில் இருந்து மீண்டது. சிவன், வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் சொர்ணபுரீஸ்வரர் என்ற திருநாமம் இங்கு இருக்கும் இறைவனுக்கு கிடைத்ததாகக் கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபட வேண்டும்? சூரியன், குரு பகவானை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..!
சொர்ண புரீஸ்வரரை வழிபடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்:
கல்வி மற்றும் தொழிலில் சிறப்பாக கிடைக்கும். குறிப்பாக நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.