குரு பூர்ணிமா 2023: இன்று எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன பொருட்களை தானம் செய்யலாம்?

By Ramya s  |  First Published Jul 3, 2023, 12:43 PM IST

குருப்பூர்ணிமா நாளான இன்று உங்கள் ராசிக்கேற்ப தானம் செய்வதால் நன்மை பெறமுடியும். 


நாடு முழுவதும் இன்று குரு பூர்ணிமா விழா (ஜூலை 3) கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் குரு மற்றும் குரு பூர்ணிமா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாளில் குரு மந்திரங்களை உச்சரித்து குரு பகவானை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இன்றைய தினம், குரு பகவானை வழிபடுவது வாழ்வில் வெற்றியைத் தருவதாகவும், முன்னேற்றத்திற்கான வழியைத் திறக்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இந்த நாளில் உங்கள் ராசிக்கேற்ப தானம் செய்வதால் நன்மை பெறமுடியும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன தானம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம் :

Tap to resize

Latest Videos

சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு பழங்கள் அல்லது சிவப்பு மலர்கள் போன்ற சிவப்பு நிற பொருட்களை தானம் செய்வது செழிப்பைக் கொண்டுவரும். குரு பகவானு செய்யப்படும் காணிக்கைகளில் சிவப்பு நிறப் பொருட்கள் மற்றும் மேஷத்தை ஆளும் கிரகமான செவ்வாயுடன் தொடர்புடைய பொருட்கள் இருக்க வேண்டும்.

ரிஷபம் 

தானியங்கள், பழங்கள், இனிப்புகள் போன்ற உணவுப் பொருட்களை தனிநபர்கள் தானமாக வழங்கலாம். குரு பூர்ணிமா அன்று குரு பகவாவனுக்கு இந்த பொருட்களை வழங்குவதன் மூலம் வாழ்க்கையில் செழிப்பு அதிகரிக்கும். 

இந்த ஒரு பொருள் தவறான திசையில் இருந்தால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும்.. உடனே மாற்ற வேண்டும்

மிதுனம் 

கல்வி மற்றும் அறிவைப் பரப்புவதற்கு மிதுன ராசிக்காரர்கள் புத்தகங்கள், பேனாக்கள் அல்லது எழுதுபொருள் பொருட்களை நன்கொடையாக வழங்கலாம். இந்த ராசிக்காரர்கள் வளர்ச்சி மற்றும் கற்றலைக் குறிக்கும் பச்சை நிறப் பொருட்களையும் வழங்கலாம்.

கடகம் : 

உணவு, போர்வைகள் அல்லது உடைகள் போன்ற பராமரிப்பு தொடர்பான பொருட்களை கடகராசிக்காரர்கள் தானம் செய்யலாம். குரு பூர்ணிமா அன்று இந்த பொருட்களை சமர்ப்பிப்பதன் மூலம் குரு பகவானின் ஆசியை பெறமுடியும்.

சிம்மம்

தங்கம் செல்வத்தையும் செழிப்பையும் குறிப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் தங்கம் அல்லது தங்க நிற பொருட்களை தானம் செய்யலாம். இந்த பொருட்களை குருவுக்கு சமர்ப்பிப்பது நிதி வளத்தை ஈர்க்க உதவும்.

கன்னி 

கன்னி ராசிக்காரர்கள் தூய்மையுடன் தொடர்புடைய பொருட்களை தானம் செய்யலாம், அதாவது துப்புரவு பொருட்கள் அல்லது சுகாதார பொருட்கள் போன்றவை. இந்த பொருட்களை குருவுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் குரு பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறலாம்.

துலாம் 

கலை, அழகு மற்றும் அழகியல் தொடர்பான பொருட்களை துலாம் ராசிக்காரர்கள் தானம் செய்யுங்கள். குருவுக்கு ஓவியங்கள், சிற்பங்கள் அல்லது அலங்காரப் பொருட்களை வழங்குவது அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள், ஆராய்ச்சி, மற்றும் ஆன்மீகம் தொடர்பான பொருட்களை தானம் செய்யலாம். ஆன்மீக தலைப்புகள், தியான கருவிகள் அல்லது அமானுஷ்ய பொருட்கள் பற்றிய புத்தகங்களை வழங்குவது ஆழமான நுண்ணறிவு மற்றும் செழிப்பை கொண்டு வரும்.

தனுசு 

பயணம், சாகசம் மற்றும் ஆய்வு தொடர்பான பொருட்களை தனுசு ராசிக்காரர்கள் நன்கொடையாக வழங்கலாம். வரைபடங்கள், பயண வழிகாட்டிகள் போன்றவற்றை வழங்குவது செழிப்பு மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் வெற்றி தொடர்பான பொருட்களை தானம் செய்யலாம். வணிகம் தொடர்பான புத்தகங்கள், அலுவலக பொருட்கள் அல்லது தொழில்முறை ஆடைகளை வழங்குவது அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தி செழிப்பை ஈர்க்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் மனிதாபிமான காரணங்கள், தொழில்நுட்பம் அல்லது புதுமை தொடர்பான பொருட்களை நன்கொடையாக அளிக்கலாம். கேஜெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வழங்குவது அல்லது தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிப்பது முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான ஆசீர்வாதங்களைக் கொண்டு வரலாம்.

மீனம் 

மீன ராசிக்காரர்கள் ஆன்மீகம், இரக்கம் மற்றும் குணப்படுத்துதல் தொடர்பான பொருட்களை தானம் செய்யலாம். ஆன்மீக புத்தகங்கள், பிரார்த்தனை மணிகள் அல்லது ஆன்மீக நிறுவனத்திற்கு நன்கொடை வழங்குவது அவர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தி செழிப்பை ஈர்க்கும்.

Guru Purnima 2023: இன்று குரு பூர்ணிமா; இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல் இதோ..!!

click me!