சென்னை இஸ்கான் கோயிலில் கௌரா பூர்ணிமா விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை, இஸ்கான் கோயிலில் கௌரா பூர்ணிமா விழா நேற்று(மார்ச்.25) வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் ஒன்று கூடி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் (பகவான் கிருஷ்ணர்) அவதரித்த தினத்தை நினைவுகூர்ந்தனர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீக பிரசன்னம் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் நிறைந்திருந்தது.
பகவான் கிருஷ்ணரின் பக்தர் அவதாரம்:
சுமார் 500 வருடங்களுக்கு முன்னர், பகவான் கிருஷ்ணர் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக இப்பூவுலகில் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அவதாரத்தின் விசேஷம் என்னவென்றால், பகவான் கிருஷ்ணர், பக்தராக அவதாரத்தார் என்பதாகும்.
undefined
இந்த அவதாரத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், பகவான் கிருஷ்ணரின் பக்தர், எப்படி கிருஷ்ணரின் நாமத்தை சொல்ல வேண்டும், பக்தி நெறியுடன் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த அவதாரத்த அவர் எடுத்தாராம். அதிலும் குறிப்பாக இவர் பொன்னிறத்தில் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிருஷ்ண பக்தர்களுக்கு குட் நியூஸ்! 25 மார்ச் அன்று கௌர பூர்ணிமா விழா... கிருஷ்ணர் அருளைப் பெற்று மகிழுங்கள்!
கௌரா பூர்ணிமா என்றால் என்ன?
'கௌரா' என்றால் பொன்னிற மேனியுடைய கிருஷ்ணரையும், ‘பூர்ணிமா’ என்றால் அவர் அவதரித்த பெவுர்ணமி நாளையும் குறிப்பதால், அது "கௌரா பூர்ணிமா" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: கார்த்திகை மாதம் பிறந்தவர்களின் பரம ரகசியம் பற்றி தெரியுமா...?
அந்தவகையில், நேற்று கௌரா பூர்ணிமா விழா இஸ்கான் கோயிலில் நடைபெற்றது. ஒருவரின் பக்தி மற்றும் சரணாகதியை அதிகரித்த ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தின் ஆன்மாவைக் கிளர்ந்தெழும் கீர்த்தனைகளுக்கு மத்தியில் விழாக்கள் தொடங்கியது. விழாவில் கிருஷ்ணருக்கு பஞ்சாமிர்தம், பல வண்ண மலர்கள், பஞ்சகவ்யா மற்றும் பல்வேறு வகையான பழச்சாறுகள் ஆகியவற்றின் புனித கலவையால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 500 க்கும் மேற்பட்ட சுவையான உணவுகள் வழங்கப்பட்டது. சுமார் 2000 பார்வையாளர்களுக்கு ஆடம்பரமான இரவு பிரசாதம் வழங்கப்பட்டது, அவர்கள் அனைவரும் ஆன்மீக ஆனந்தமும் நன்றியுணர்வும் நிறைந்த அந்த நாளைக் கண்டு மகிழ்ந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D