காலில் கருப்பு கயிறு கட்டினால் தீய சக்தி நெருங்காதா.. கண் திருஷ்டி நீங்குமா..? உண்மை என்ன..??

By Kalai Selvi  |  First Published Mar 26, 2024, 4:21 PM IST

ஜோதிடம் படி, கணுக்காலில் கருப்பு கயிறு அணிபவர்களுக்கு சனி கிரகத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.


பொதுவாகவே, பலர் கணுக்காலில் கருப்பு கயிறு கட்டிருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள். சில அதை பேஷனுக்காக கட்டியிருப்பார்கள். பல பிரச்சனைகளை தீர்க்க காலில் கருப்பு கயிறு கட்டுபவர்கள் உண்டு. இது பார்ப்பதற்கு ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் ஜோதிடம் மற்றும் பழங்கால நம்பிக்கைகளில் இது ஒரு பெரிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது. 

மேலும், இது பிரபஞ்சத்தின் ஆற்றல்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது மற்றும் கெட்ட விஷயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். இப்போது கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன் முக்கியம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

Latest Videos

இதையும் படிங்க: வைரம் வைடூரியம் போட்டாலும் கூட அம்பானி குடும்பப் பெண்கள் கையில் கருப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா..?

கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன் அவசியம்?

  • ஜோதிட சாஸ்திரப்படி, கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவது பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தீய கண்ணில் இருந்து ஒருவர் பாதுகாக்கப்படுகிறார். நம்பிக்கையின்படி, கணுக்காலில் கருப்பு கயிறு கட்டினால் நிதிநிலைமை பலப்படும்.
  • ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களுக்கு நமது வாழ்க்கையை பாதிக்கும் சிறப்பு சக்திகள் உள்ளன. நீங்கள் பிறக்கும்போது, கிரகங்களின் நிலைகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கலாம். எனவே, கணுக்காலில் கறுப்பு கயிறு கட்டினால் இந்த கிரகங்களின் ஆற்றல்களுடன் சிறப்பாக இணைக்க உதவும் என்று கருதப்படுகிறது.
  • ஜோதிடபதி கணுக்காலில் கருப்பு கயிறு கட்டி இருப்பவர்களுக்கு சனி கிரகத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • கறுப்பு பெரும்பாலும் கெட்ட விஷயங்களைத் தடுக்கும் ஒரு நிறமாகக் காணப்படுகிறது. கருப்பு கயிறு அணிவது எதிர்மறை ஆற்றல் மற்றும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆவிகளை விலக்கி வைக்கும் என்று நம்பப்படுகிறது. 

இதையும் படிங்க: கை, கால்களில் கருப்பு கயிறு... மறந்தும் கூட 'இந்த' தவறை செய்யாதீங்க.. எச்சரிக்கும் ஜோதிடம்!

  • உங்கள் கணுக்கால் உங்கள் உடலின் ஒரு முக்கிய பகுதியாகும். எனவே, இங்கு கறுப்பு கயிறு கட்டினால் உங்கள் வாழ்க்கை தடைபட்டாலும் வலுவாக இருக்க உதவுகிறது. மேலும் இது சக்திவாய்ந்ததாகக் கருதப்படுவதால், நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது.
  • உங்கள் கணுக்காலில் கருப்பு நூலை அணிவது வெறும் ஃபேஷன் அல்ல. இது பிரபஞ்சத்துடன் இணைவதற்கும் கெட்ட விஷயங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒரு வழி. வாழ்க்கை கடினமாக இருந்தாலும், வலுவாகவும் சமநிலையுடனும் இருக்க உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!