ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; அமைச்சர் சேகர்பாபு உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By Velmurugan s  |  First Published Aug 23, 2023, 12:24 PM IST

கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்ற நிலையில், அமைச்சர் சேகர்பாபு உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஈச்சனாரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் தமிழ்முறைப்படி நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

undefined

முன்னதாக, நேற்று நன்மங்கள இசை, திருமுறை பாராயணம், நான்காம் கால வேள்வி பூஜை, 5-ம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை நன்மங்கள இசை, திருமுறை பாராயணம் நடைபெற்றது. அதன் பிறகு கலைகள் நாடிகளின் வழியாக மூலத்திருமேனியை அடைதல் நிகழ்வு நடத்தப்பட்டது.

சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டியவரின் கை விரல்கள் துண்டிப்பு; 77 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை

இன்று காலை ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிசேகம் நடைபெறும்பொழுது,  பிரம்மாண்ட ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று மாலை சுவாமி திருவீதி உலா நடக்கிறது. பின்பு நாளை முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது.

click me!