திருப்பதி வெங்கடாசலபதி (பாலாஜி) கோவில் கேரளாவில் இருக்கும் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அடுத்த பணக்கார கோவில் என்று கூறப்படுவது உண்டு.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு பல்வேறு வங்கிகளில் ரூ.17,000 கோடி ரொக்கம், 11 டன் தங்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி ஏவி தர்மா ரெட்டி, வெங்கடாசலபதி கோவில் தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களை தெரிவித்து இருந்தார். தேவஸ்தானத்தின் புள்ளி விவரங்களின்படி, திருப்பதி கோவிலில் உள்ள மூலவருக்கு 1.2 டன் தங்க ஆபரணங்களும், 10 டன் வெள்ளியும் உள்ளன. இதுதவிர 11 டன் தங்கம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி மலைக் கோவிலுக்கு 2009-10ஆம் ஆண்டுகளில் 50,000 ஆக இருந்த ஒரு நாள் பக்தர்களின் வருகை எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், தேவஸ்தானத்திற்கான வருமானமும் அதே விகிதத்தில் அதிகரித்து வருகிறது. தேவஸ்தானத்தின் உண்டியல், காணிக்கை முடி விற்று வருமானம், பல்வேறு சேவைகள், தரிசனங்கள் தொடர்பான டிக்கெட் விற்பனை, லட்டு விற்பனை, அறைகள் ஒதுக்கீடு, நன்கொடைகள் என கோவிலுக்கு பல்வேறு வழிகளில் வருமானம் வருகிறது.
பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவது ஏன் தெரியுமா? சுற்றினால் இந்த தோஷம் நீங்கும்..!!
கோவிலுக்கான ஆண்டு பட்ஜெட்டும் ரூ. 100 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 2009-10 ஆம் ஆண்டில், தேவஸ்தானத்தின் தலைவர் டி.கே.ஆதிகேசவுலு நாயுடு ரூ.1,365 கோடி ஆண்டு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்து இருந்தார். அதே ஆண்டில் ரூ.521 கோடி வருமானமும் எதிர்பார்க்கப்பட்டது. 2011-12 ஆம் ஆண்டிற்கான ஆண்டு வரவு செலவுத் திட்டம் 1,662 கோடி ரூபாயாக இருந்தது. அதே நிதியாண்டில் உண்டியல் மூலம் ரூ.650 கோடி வருமானம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரூ. 555 கோடி வருமானம் கிடைத்து இருந்தது.
கோவிட்-19 லாக்டவுன் காலத்தில், உண்டியல் மூலம் தேவஸ்தானம் வருமானம் வெகுவாகக் குறைந்து, 2020-21-ல் எதிர்பார்க்கப்பட்ட ரூ. 1,300 கோடிக்கு பதிலாக ரூ.721 கோடியாக இருந்தது. இதன் விளைவாக, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட்டில் திருத்தம் செய்யப்பட்டு ரூ. 2,553 கோடியாக குறைக்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் ரூ 2,837 கோடியாகவும், 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் ரூ 2,937.85 கோடியாகவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது.
2023-24 ஆம் நிதியாண்டிற்கு ரூ. 4,411.68 கோடி ஆண்டு பட்ஜெட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. உண்டியல் வருமானம் மாதந்தோறும் ரூ.100 கோடியை தாண்டி வருகிறது. இதன் மூலம், தேவஸ்தானத்திற்கு உண்டியல் மூலம் ஆண்டு வருமானம் ரூ.1,200 கோடி முதல் ரூ. 1,300 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காணிக்கை முடி விற்று வருமானமாக ஆண்டுக்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 150 முதல் ரூ. 170 கோடி வருமானம் வருகிறது.
குரு வக்ர பெயர்ச்சி 2023.. இந்த ராசிகளுக்கு அடுத்த 4 மாதங்களுக்கு அமோகமான காலம்..
தேவஸ்தானம் வெளியிட்டு இருந்த வெள்ளை அறிக்கையில், செப்டம்பர் 2022 வரை பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட நிதி குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 5,358.11 கோடி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.1,694.25 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ. 1,839.53 கோடி, கனரா வங்கியில் ரூ.1,351.00 கோடி, ஆக்சிஸ் வங்கியில் ரூ. 1,006.20 கோடி, ஹெச்திஎப்சி வங்கியில் ரூ. 2,122.85 கோடி திருப்பதி தேவஸ்தானத்திற்காக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.