Pongal 2023: பொங்கல் பண்டிகையில் நற்பலன் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானம் செய்யணும் தெரியுமா?

By Pani Monisha  |  First Published Jan 7, 2023, 10:50 AM IST

தமிழர் திருநாளான பொங்கலன்று உங்களுடைய ராசிப்படி எந்த பொருளை தானமாக வழங்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள். 


பொங்கல் விழா எல்லாருக்கும் விருப்பமான விழா. தொடர்ச்சியான விடுமுறைகளும், இனிப்பு வகைகளும் என ஒவ்வொரு வீடும் கொண்டாட்டத்தில் திளைக்கும் நாள் என்றால் மிகையல்ல. அந்த திருநாளில் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன பொருள்களை தானமாக வழங்க வேண்டும் என தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள். 

அன்பான மேஷ ராசிக்காரர்களே! 

Tap to resize

Latest Videos

மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் கிடைக்க மேஷ ராசியுடைய அன்பர்கள் எள், வெல்லம் ஆகியவற்றை தானமாக வழங்கலாம். இதை கொடுக்க முடியாதவர்கள் மற்ற இனிப்பு பொருள்களையும் தானமாக கொடுக்கலாம். 

அன்பான ரிஷப ராசிக்காரர்களே! 

வீட்டில் தீய சக்திகள் ஆதிகத்தை அறவே ஒழிக்க பொங்கல் நாளில் ரிஷப ராசி அன்பர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைகளுக்கு புத்தாடைகள் கொடுக்கலாம். அப்படி கொடுக்க முடியாத நபர்கள் சிறிய துண்டு, குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுக்கலாம். இதனால் நம் வீட்டில் இருக்கும் நம் வீட்டில் தீய சக்திகள் ஆதிக்கம் போய் நல்ல ஆற்றல் பரவும். இது தவிர எள் இருக்கும் இனிப்பு வகைகளை கொடுக்கலாம். 

அன்பான மிதுன ராசிக்காரர்களே! 

சனி பார்வை விலக மிதுன ராசியினர் கருப்பு எள்ளை தானமாக கொடுக்க வேண்டும். வீட்டில் சந்தோஷம் பொங்க வெள்ளை எள்ளை தானம் செய்யுங்கள். தேவையில் இருப்போருக்கு பச்சை வண்ண உடைகளை கூட தானமாக அளிக்கலாம். 

இதையும் படிங்க; கோர்ட் கேஸ்னு இழுபறியாக கிடக்கும் சொத்தை மீட்க இப்படி விளக்கேற்றுங்கள்!

அன்பான கடக ராசிக்காரர்களே! 

மகிழ்ச்சியான வாழ்வை பெற கடக ராசியினர் எள்ளு, வெல்லம், ஜவ்வரிசி ஆகியவற்றை தானம் செய்யலாம். தானம் மட்டுமின்றி கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பது, தீவனம் கொடுப்பதை ஆகியவை செய்தால் நன்மை கிடைக்கும்.  

அன்பான சிம்ம ராசிக்காரர்களே! 

எள், வெல்லம், புத்தாடைகளை சிம்ம ராசியினர் தானம் செய்தால் வாழ்க்கையில் சிரமங்கள் அகன்று எளிமையான வாழ்வில் நிம்மதி கிடைக்கும். லெட்சுமி அருளையும் நீங்கள் பெற்று கொள்ளலாம். 

அன்பான கன்னி ராசிக்காரர்களே! 

இந்த ராசிக்காரகள் எண்ணெய், எள்ளு விதை, கருப்பு உளுந்து ஆகியவை மற்றவருக்கு தானமாக துவண்டு போன நிதி நிலைமை முன்னேற்றம் காணும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமும் கூட நல்லபடியாக மாறும். 

அன்பான துலாம் ராசிக்காரர்களே! 

துலாம் ராசியினர் எண்ணெய், எள்ளு விதைகள், பருத்தி ஆகியவை தானமாக கொடுப்பதால் வீட்டில் நிம்மதி கிடைக்கும். மலை போல இருக்கும் செலவுகள் குறைந்து பணம் கொழிக்கும். 

அன்பான விருச்சிக ராசிக்காரர்களே! 

இந்த ராசிக்காரர்கள் பொங்கல் விழாவில் அரிசி, எள்ளு ஆகியவை தானம் செய்தால் வீட்டில் செல்வமும், ஆரோக்கியமும் நிலைக்கும். 

அன்பான தனுசு ராசிக்காரர்களே! 

தனுசு ராசியினர் கொண்டைக்கடலை, எள் விதைகளை தானம் செய்யலாம். பக்கத்து வீட்டில் வசிப்போருக்கு இனிப்பும் அளிப்பதால் மகிழ்ச்சி பெருகும். 

அன்பான மகரம் ராசிக்காரர்களே! 

கடவுளின் ஆசியும், அருளும், மன நிம்மதியும் பெற மகர ராசியினர் எள், உடைகள், எண்ணெய், பால், இனிப்பு ஆகியவை தானம் செய்யலாம். 

அன்பான கும்ப ராசிக்காரர்களே! 

பொங்கல் அன்று எள்ளு, எண்ணெய், சீப்பு, கருப்பு வண்ண ஆடைகளை தானமாக செய்தால் நல்ல பலனை பெறலாம். 

அன்பான மீனம் ராசிக்காரர்களே! 

பொங்கல் விழா தினத்தன்று ஜவ்வரிசி, கொண்டைக்கடலை, எள் விதை, உடை ஆகியவை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். பால் பொருள்களையும் தானம் செய்யலாம். வீட்டில் மகிழ்ச்சியை உருவாகும். 

இதையும் படிங்க; Pongal Recipes 2023: பொங்கல் பண்டிகைக்கு இந்த ரெண்டு ஸ்வீட்டையும் செஞ்சு அசத்திடுங்க!

click me!