உங்கள் வீடுகளில் லட்சுமி வாசம் செய்ய இதை செய்யுங்கள்!!

By Dinesh TGFirst Published Oct 17, 2022, 11:22 PM IST
Highlights

வைகுண்டத்தில் தான் ஸ்ரீ நாராயணனும், மகாலட்சுமியும் வசிக்கிறார்கள். அப்போது ஒரு முறை இருவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். இந்த பேச்சு நேரம் நேரம் ஆக பூலோகம் பற்றியதாய் மாறியது. எப்போதுமே கணவன்மார்களுக்கு மனைவிமார்களை கோபப்படுத்துவதிலும், அவர்களை வெற்றி பெறுவதிலும் அளப்பரிய ஆனந்தம் இருக்கும். அதில் பரந்தாமன் மட்டும்  விதிவிலக்கா என்ன.. 
 

வைகுண்டத்தில் தான் ஸ்ரீ நாராயணனும், மகாலட்சுமியும் வசிக்கிறார்கள். அப்போது ஒரு முறை இருவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். இந்த பேச்சு நேரம் நேரம் ஆக பூலோகம் பற்றியதாய் மாறியது. எப்போதுமே கணவன்மார்களுக்கு மனைவிமார்களை கோபப்படுத்துவதிலும், அவர்களை வெற்றி பெறுவதிலும் அளப்பரிய ஆனந்தம் இருக்கும். அதில் பரந்தாமன் மட்டும்  விதிவிலக்கா என்ன.. 

இவர்கள் இருவரின் உரையாடலும் நல்ல முறையில் போய் கொண்டிருந்த தருணத்தில் பரந்தாமனுக்கு திடீரென்ற ஒரு ஆசை. நாம் தேவியை சற்று கோபப்படுத்தி பாப்போம் என்ற ஆசை. எப்போதுமே இருவருக்கு இடையிலும் நடக்கும் உரையாடலில் மகாலட்சுமி சதா கேள்வியை கேட்டு துளைத்து கொண்டு இருப்பாராம். இன்று விடக்கூடாது நாம் கேள்விகளை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் அந்த ஆசை. 

அப்போது பரந்தாமன், "தேவி உன்னிடத்தில் ஒரு உதவி கேட்கலாமா?.." என்று தனது உரையாடலை ஆரம்பித்தார். தேவியும் ஏதும் அறியாமல் "அப்படி என்ன தாங்கள் என்னிடம் கேட்க போகிறீர்கள்? சுவாமி கேளுங்கள்.. என்னால் முடிந்ததை, எனக்கு தெரிந்ததை செய்கிறேன்" என்று தெரிவித்தாள். நீயும் பூலோக பெண்கள் போலவே பக்தர்கள் படும் பாட்டை காண முடியாமல், உங்களின் பக்தன் நல்லவன்.. அவன் இப்படி செய்கிறான், இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று புலம்பி கொண்டிருக்கிறாயே.. இவர்களை ஒரு நாள் மட்டும் நீ பார்த்து கொள்ளக் கூடாதா? நானும் சற்று ஓய்வு எடுத்துக் கொள்வேன்.. என்று தெரிவித்தார் பரந்தாமன். 

ஸ்ரீ தேவி தெரியும்... மூதேவி யாருன்னு தெரியுமா?

உடனே தேவி, என்ன சுவாமி இது, அது எப்படி முடியும், இவ்வளவு பெரிய சுமையை என்னால் சுமக்க முடியுமா? என்று தயக்கத்துடன் தெரிவிக்க, சரி தேவி. ஒரு நாள் வேண்டாம் வெறும் ஒரு மணி நேரமாவது.. என்று இழுத்தார் பரந்தாமன். ஆனால் மகாலட்சுமி அதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. சரி.. "ஒரு நிமிடமாவது பார்த்து கொள்ள முடியுமா" என்று கேட்டுள்ளார். "மீண்டும் மீண்டும் என்னை நம்பி இத்தனை பெரிய சுமையை கொடுக்கிறீர்களே" என்று லட்சுமி சொல்லிக்கிக்கொண்டே இதனை ஏற்றுக் கொண்டாள். ஒரு நிமிடத்த்தில் அப்படி என்ன வந்து விடப் போகிறது, அப்படி என்ன நடந்து விடப் போகிறது என்ற எண்ணத்தில் தேவி இருந்தாள். 

ஆனால் பிரளயம் ஏற்படுவதற்கு ஒரு நாள் இல்லை ஒரு நாழிகையே போதும். தேவியின் காதுகளில் வண்டுகளின் ரீங்காரம் போல பக்தர்களின் புலம்பல்களை, வேண்டுதல்களும், துன்பங்களும், துயரங்களும் ஒலித்து கொண்டே இருந்தன. ஒன்றில்லை இரண்டில்லை ஓராயிரம் வேண்டுதல்கள் பக்தர்களிடம் இருந்து வந்து கொண்டே இருந்தது. எல்லாம் முடியவில்லை சுவாமி என்று பரந்தாமனிடம் அடைக்கலம் ஆனால் தேவி. பரந்தாமனுக்கு புன்னகைத்து கொண்டே என்ன நடந்தது தேவி என்று கேட்டார். "இனி இவ்வளவு சுமையை என்னிடம் கொடுக்காதீர்கள், நான் எனக்கு பிடித்த பக்தர்களின் வீடுகளில் வசித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தாள். 

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலின் சிறப்புகள்!!

உடனே பரந்தாமன் நீ வசிக்கும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய் என கேட்க, அதனை விவரிக்கிறாள் தேவி. தர்மம் செய்பவர்களாகவும், இரக்க குணம் உடையவர்களாகவும், பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்த கூடியவர்களாகவும், பொய் பேசாதவர்களாவும், தான் என்கிற கர்வம் இல்லதாவர்களாகவும், கடவுள் மீது பக்தியும் நம்பிக்கையும் உடையவர்களாகவும், அன்பும் அமைதியும் கொண்டவர்களின் வீடுகளில் தான் நான் நிரந்தரமாக வசிப்பேன் என்று தேவி தெரிவித்தாள்.

பரந்தாமனுக்கு உள்ளம் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும் தேவி" என்று  அருளினார். உங்களது வீடுகளிலும் லட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்றால் மேற்சொன்ன அனைத்தையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

click me!