ஆனைமுகனுக்கு அருகம்புல் தான் விசேஷம் ஏன் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Oct 17, 2022, 11:13 PM IST

முதற்முதல் கடவுளான விநாயகருக்கு முதலாக சூடுவது அருகம்புல் தான். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாடுகள் இருக்கும், ஒவ்வொரு விதமான பூஜைகள் சிறப்புடன் நடைபெறும். அப்படித்தான் விநாயகருக்கான பூஜைகள் போது அருகம்புல் தவறாது இருந்து  விடும். இப்படி விநாயகருக்கு வைக்கப்படும் அருகம்புல்லிற்கு பின் ஒரு கதையுள்ளது.
 


எமதர்மனின் மகன் அனலாசுரன். எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும் அனலாசுரன், யாருடைய உடம்பிலும் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்து சக்தியை உறிஞ்சி விடுவது போன்ற ஒரு வரம் ஒன்று பெற்றிருந்தான். ஒரு முறை அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களுக்கு விடாது துன்பம் கொடுத்து கொண்டே இருந்தான். தேவர்களுக்கு இப்படி துன்பம் கொடுத்து வந்த விநாயகரை எதிர்த்து விநாயகர் போரிட தொடங்கினர். அப்போது அனலாசுரன் விநாயகரின் படைகள் அனைத்தையும் தனது வாயில் இருந்து நெருப்பை கக்கி அழித்து விட்டான். 

இதனைக் கண்ட விநாயகப் பெருமானுக்கு கோபம் தலைக்கேறியது. உடனே அசுரன் அனலாசுரனை தூக்கி அப்படியே விழுங்கி விட்டார். விநாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் தனது வெப்பத்தால் சூடாக்கினான். இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் விநாயகரும் 'வயிறு எரிகிறதே' என்று அங்கும் இங்குமாய் ஓடத் தொடங்கினார்.

Tap to resize

Latest Videos

Deepavali : தீபாவளி கொண்டாட இத்தனை காரணங்களா?

இதனால் விநாயகரின் சூட்டைத் தணிக்க தேவர்கள் பலரும் குடம் குடமாய் கங்கை நீரினால் அபிஷேகம் செய்யத் தொடங்கினர். ஆனாலும் விநாயகருக்கு வெப்பமும் எரிச்சலும் குறையவில்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர்,  வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய சப்த ரிஷிகளும் அங்கு வந்தனர். அவர்கள் வரும்போது ஒரு சாண் அளவிருக்கும் 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். உடனே விநாயகரின் வெப்பம் முழுக்க தணிந்து அவரின் திருமேனியும் குளிர்ந்து விட்டது. விநாயகரின் எரிச்சலால் ஒட்டுமொத்த உலகமும் வெந்தது. தற்போது விநாயகர் குளிர்ந்ததும் உலகமும் அமைதி அடைந்து தணிந்தது.

அந்த அசுரன் அனலாசுரனும் விநாயகரின் வயிற்றிலேயே ஜீரணம் ஆகி விட்டான். அதோடு மனம் மகிழ்ந்த விநாயகர், இனி எனது அருள் வேண்டும் நபர்கள் எண்ணை அருகம்புல் அர்ச்சனை செய்திட வேண்டும் எனக் கூறினார். அன்றிலிருந்து தான் விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. விநாயகரின் அருளை பூரணமாக பெற வேண்டும் என்றால் எளிய அருகம்புல் மாலையே போதுமானது. அருகம்புல் படைத்தால் அனைவரின் வாழ்விலும் மங்களம் உண்டாகி விடும். 

Lashmi Kataksam : லஷ்மி கடாட்சம் தங்க இதை செய்யுங்கள்!!

விநாயகருக்கும், அருகம்புல்லிற்கும் உள்ள தொடர்பை விளக்கும் பல கதைகளில் இதுவும் ஒன்று. மேலும் நமது முன்னோர் நமக்கு காட்டிய வெப்பத்தை குறைக்கும் வழிகளில் இதுவும் ஒன்று. சித்தர்கள் அருகம்புல்லை ஆரோக்கியப் புல், காகாமூலி என்றும், இன்னும் அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி என வேறு பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது.

இன்னும் குறிப்பாக நமது முன்னோர்கள் அருகம்புல் மழையே இல்லாவிட்டாலும், காய்ந்து போய் விடுமே தவிர அழிந்து போகாது. மழை சிறிதளவில் பெய்தால் கூட உடனே துளிர்ந்து விடும். அதுபோன்று தான் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து விடாமல், நம்பிக்கையுடன் இருந்திட வேண்டும் அருகம்புல்லை உதாரணமாக கூறியுள்ளார்கள். இதுபோன்று அருகம்புல் பலன் குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர்.

click me!