நவ பாஷாணங்கள் குறித்து நன்கு அறிந்தவர்கள் சித்தர்கள் தான். இவர்களின் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் என்று கூறப்படுகிறது.
நவம் என்றால் ஒன்பது என்று அனைவரும் தெரியும். இங்கு பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களைக் குறிக்கிறது. இந்த நவ பாஷாணங்கள் குறித்து நன்கு அறிந்தவர்கள் சித்தர்கள் தான். இவர்களின் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் என்று கூறப்படுகிறது. இந்த பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளது என்றும், இதில் நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு என்று கூறப்படுகிறது. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடிய தன்மை கொண்டது. இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் குணங்கள் உண்டு என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நவபாஷாணம் குறித்து போகர் என்னும் சித்தரின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவபாஷாண சிலை பற்றிய தகவலை தனது சீடரான புலிப்பாணி சித்தருக்கு கூறியுள்ளார். கெளரி பாஷாணம், கெந்தக பாஷாணம், சீலைப்பாஷாணம், வீரப்பாஷாணம், கச்சாலப்பாஷாணம், சூதப்பாஷாணம், சங்கு பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், தொட்டி பாஷாணம் என ஒன்பது வகையான பாஷாணங்கள் உண்டு. இந்த ஒன்பதையும் கலந்து மனோன்மணி அம்மனின் பூரண அருளைப் பெற்று பாஷாணங்களை ஒன்று கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே உரியது. சித்தரியல் முறையின் படி அணுக்களை பிரித்து, மீண்டும் சேர்ப்பதை தான் நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். மேலும் நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன என்றும், நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள் நவக்கிரகங்களின் சக்தியை பெற்று விடுகிறது என்பது நம்பிக்கையாகும்.
தனம் தான்யம் பெருக்கி தரும் சப்த கன்னியர்கள்... வரலாறும்.. வழிபாடும்..
தமிழகத்தில் மொத்தம் நான்கு இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில் மற்றும் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். சிவகங்கையில் பெரிச்சிகோவில் என்ற இடத்திலும் நவபாஷாண பைரவர் மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு சிலைகள் போகர் உருவாக்கியவை. ஆனால் தேவிப்பட்டிணத்தில் உள்ள மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
நவக்கிரக தோஷங்கள், நவக்கிரக பரிகாரங்கள், நவக்கிரக திசைகளின் தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு நவபாஷாண சிலை வழிபாடு நல்ல பலனை கொடுக்கும். நவபாஷாண சிலைக்கு செய்யப்படும் அபிஷேக நீரை குடித்தால் தீராத நோயும் தீர்ந்து விடும் என்கிறார்கள் பக்தர்கள். நவகிரகங்களின் சக்தியை அபரிமிதமாக கொண்டிருக்கும் நவபாஷாண தெய்வ சிலையை வழிபடுவதால் நமக்கு வரும் துன்பங்கலிருந்து வெளிவரவும் முடியும்.
Lashmi Kataksam : லஷ்மி கடாட்சம் தங்க இதை செய்யுங்கள்!!
பழனியில் உள்ள நவபாஷாண சிலை கல் கிடையாது மூலிகைகளை நன்கு அரைத்து இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை ஆண்ட ராஜா ராஜா சோழன் பாண்டியர்களும் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தருணத்தில், மற்றவர் கைக்கு இந்த மருந்து கிடைத்து விடக்கூடாது என்றும் அல்லது அதன் பின்வந்த சுல்தான்கள் பிரிட்டிஷ் இவர்கள் இந்த மருந்தின் மகத்துவம் குறித்து தெரிந்து கொண்டு எடுத்து செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்ற அச்சம் கொண்டதால் இதை பத்திரபடுத்த யோசித்து வந்துள்ளான். பொதுவாக தமிழகத்தில் கடவுள்கள் என்றாலே தனி மரியாத தான் அதுவும் முருகன் என்றால் சொல்ல வேண்டியதே இல்லை. அதனால் தான் இந்த நவபாஷாண சிலையை முருகன் சிலையில் செய்வதால் யாருக்கும் இந்த மருந்தின் மீது தனியுரிமை ஏற்படாது. ஏனென்றால் முருகன் என்பவர் பொதுவானவர் என்று அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தே போகர் சித்தர் இவ்வாறு செய்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.