ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகளின் கலாச்சாரம் ஆகும். நாட்டில் ஆண்டு முழுவதும் பல்வேறு பண்டிகைகள் உற்சாகமகா கொண்டாடப்படுகின்றன. நாட்டின் மிக முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி என்றாலே புத்தாடைகளும் பட்டாசு வெடிப்பதும் தான் நம் நினைவுக்கு வரும். தீபாவளி அன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளியின் வரலாறு :
undefined
தீமையின் வடிவமான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது தான் இந்த தீபாவளி பண்டிகை என இந்துப் புராணங்கள் தெரிவிக்கின்றன. நரகாசுரன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். விஷ்ணு பகவான் அவனை அழிக்க நினைத்தார். ஆனால் அவன் பூமித்தாய்க்கு பிறந்தவன் என்பதால், தனது தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாது என்ற வரத்தை பெற்றிருந்தான். ஆனால் நரகாசுரனுக்கு எதிராக தந்திரம் செய்த மகாவிஷ்ணு அவனுடன் போரிட்டார். அப்போது நரகாசுரன் எய்த அம்பில் காயம்பட்டு மயக்கமடைந்தது போல் கீழே விழுந்தார். அப்போது இதனால் கோபமடைந்த சத்தியபாமா நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்தியபாமா பூமித்தாயின் அவதாரம் என்பதை உணராமல் நரகாசுரன் அவருடன் போர் செய்தான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அன்னையின் அம்புக்கு பலியாக சரிந்த போது தனக்கு சத்தியபாமா தனது தாய் என்று புரிந்தது. அப்போது தனது தாயிடம் ஒரு வரம் கேட்டான் நரகாசுரன். தான் மறைந்த இந்த நாள் மக்கள் மனதில் நிலைத்து நிற்க வேண்டும் எனவும், தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான். மகா விஷ்ணுவும், சத்ய பாமாவும் அவன் வேண்டிய வரத்தை கொடுத்தார்கள். அதன்படி நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்கிறது கிருஷ்ண லீலை புராணம்.
தீபாவளி பற்றி மற்றொரு புராணக்கதையும் உள்ளது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர், ராவணனை தோற்கடித்த பிறகு, வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பினார். அயோத்தி மக்கள் தீப ஒளியேற்றி ராமரை வரவேற்றனர். இந்த நிகழ்வு இந்து மாதமான ஐப்பசி மாதத்தில் அமாவாசை அன்று நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது, இதன் தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகை கொண்டாடபப்டுகிறது என்று கூறப்படுகிறது.
வீட்டில் குபேரன் பொம்மையை இந்த திசையில் வையுங்கள்; பிறகு நடக்கும் மாயாஜாலத்தை நீங்களே பாருங்க!
மற்ற பண்டிகைகளை போலவே தீபாவளி அன்றும், பகவான் கிருஷ்ணரை நினைத்து, மகாலட்சுமி, குபேரரை நினைத்து பூஜை செய்தால் நல்லது. தீபாவளி முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து, தங்கள் முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை ஒரே ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில் தீபாவளி 5 நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் 10 முதல் நவம்பர் 14 வரை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொதுவாக அமாவாசைக்கு முந்தைய நாளில் தீபாவளி பண்டிகை வரும். ஒரு சில ஆண்டுகளில் அமாவாசை அன்று தீபாவளி பண்டிகை வரும். தீபாவளி அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து குளிப்பது மிக முக்கியம். தீபாவளியன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மேலும் தீபாவளி பலகாரங்கள் மற்றும் புத்தாடைகள் ஆகியவற்றை பூஜையறையில் வைத்து படைத்து விட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மேலும் தீபாவளியன்று முதல் செலவாக உப்பும், மஞ்சளும் வாங்க வேண்டும். பின்னர் மாலையில் வீட்டில் விளக்கேற்றும் போது அதனை வைத்து வழிபட வேண்டும். இந்த நாளில் மங்கலமும், செல்வமும் வீட்டில் நிறைந்திருக்க இந்த 2 பொருளையும் வாங்கி வணங்க வேண்டும்.