பழனியில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக வணிகர்கள் கடையடைப்பு; பொருட்கள் வாங்க முடியாமல் பக்தர்கள் அவதி

By Velmurugan sFirst Published Jan 18, 2024, 12:36 PM IST
Highlights

பழனி மலை அடிவாரத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொருட்கள் வாங்க முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவார பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி திருத்தொண்டர் பேரவையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வில்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து இருந்தார். 

வழக்கு விசாரணையில் ஆக்கிரமிப்பு கடைகளை  அகற்றவும், அதனை கண்காணிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் பழனி அடிவாரம் பகுதியில் தினமும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடிவாரம் பகுதியில் வர்த்தகர்களை கஷ்டப்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இன்று அடிவாரம்  மற்றும் சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

10 ரூபாய்க்கு முட்டையுடன் பிரியாணி; ஆஃபர் பிரியாணியை வாங்க ஆயிரக்கணக்கில் குவிந்தவர்களால் போக்குவரத்து பாதிப்பு

அதில் கடந்த 15 நாட்களாக அடிவாரம் பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பக்தர் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அடிவாரம் வர்த்தக சங்கத்தினர் மற்றும் வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டதாகவும், இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பேரில் தினசரி வர்த்தகர்களை கஷ்டப்படுத்தும் விதமாக அதிகாரிகள் நடந்துகொள்வதாகவும் வணிகர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற சிறவாவயல் மஞ்சுவிரட்டில் நிகழ்ந்த சோகம்; சிறுவன் உள்பட இருவர் பலி

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கடை அடைப்பு போராட்டம் காலை 9 மணி முதல் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு காரணமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பேன்சி கடைகள், சாமி பட விற்பனை செய்யும் கடைகள் பாத்திரம் விற்பனை செய்யும் கடைகள் என ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

click me!