இந்த செடிகள் உங்கள் வீட்டிற்கு அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்! அவை..

Published : Jan 17, 2024, 05:05 PM ISTUpdated : Jan 17, 2024, 05:16 PM IST
இந்த செடிகள் உங்கள் வீட்டிற்கு அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்! அவை..

சுருக்கம்

இந்த செடிகள் வீட்டில் வைத்து வளர்த்தால், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். முழுவிவரம் உள்ளே..

பொதுவாக நாம் கடவுளை கோவிலுக்கு சென்றும், வீட்டில் வைத்தும் வழிபடுவது வழக்கம். அப்படி நாம் வணங்கும் போது நம்முடன் இருக்கக்கூடிய ரொம்பவே முக்கியமான பொருள் எதுவென்றால் அது மலர்கள் தான். 

ஆம், எப்படியெனில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மலர்கள் உகந்த என்று நமக்கு தெரியும். அப்படி அவர்களுக்கு உகந்த மலர்களை வைத்து நாம் வழிப்படுவதன் மூலம் பலவிதமான நன்மைக்களைப் பெறலாம். இன்னும் சிலரோ கடவுள்களுக்கு உகந்த மலர்களை தங்கள் வீட்டுகளில் வளர்ப்பார்கள். அந்தவகையில், இந்த மாதிரியான  செடிகளை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்தால், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அது குறித்து விரிவாக இப்பதிவில் நாம் பார்க்கலாம்.. 

பவளமல்லி: நல்ல மணம் நிறைந்த இந்த பூவை அனைத்து கடவுள்களுக்கும் வைத்து வழிபடலாம். முக்கியமாக இந்தப் பூ இருக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் எதிர்மறை சக்திகள் மற்றும் தீய எண்ணங்கள் எதுவும் உங்களை அணுகாது. அதுமட்டுமின்றி, கடவுளுக்கு இந்த பூவை வைத்து வழிபடும் போது உங்கள் வேண்டுதல் உடனே கேட்கப்படும்.

இதையும் படிங்க: நீங்கள் சீக்கிரம் பணக்காரராக 'இந்த' செடியை உடனே வீட்டில் நடுங்கள்..!

பாரிஜாதம்: பெருமாளுக்கு உகந்த பூ இதுவாகும். அதுமட்டுமின்றி இதில் பெருமாள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த பூவை பார்ப்பது அல்லது வீட்டில் இந்த செடியை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொண்டு வருமாம். எனவே, செல்வம் பெருக உடனே இந்த செடியை வீட்டில் வையுங்கள்.

இதையும் படிங்க:  வாஸ்து டிப்ஸ்: உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் வரனுமா? இந்த செடி வையுங்க.!!

மனோரஞ்சிதம்: இந்தச் செடி வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும். மேலும் நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம் இருந்தால், அவற்றை நீக்கி நீங்கள் எதிர்பாராத அளவுக்கு உங்களுக்கு லாபத்தை கொண்டு வரும். குறிப்பாக, உங்கள் எதிரிகளை வெல்லக்கூடிய அற்புதமான சக்தி இந்த செடிக்கு உண்டு.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

செண்பகப் பூ செடி: இந்த செடி யார் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களிடம் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செடி சுக்கிர னின் அம்சமாக திகழ்கிறது. மேலும், எந்த வீட்டில் இந்த செடி வளர்ந்து பூக்கள் பூத்து மலர்கிறதோ அந்த வீட்டில் சுக்கிரனின் அருள் அபரிதமாகக் கிடைக்கும். அவர்கள் எப்போதுமே செல்வ செழிப்புடன் நிறைந்து வாழ்வார்கள். அதுமட்டுமல்லாமல், இதன் பூவை 
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு சூட்டினால் அவளது மனம் குளிர்ந்து நமக்கு செல்வ செழிப்பை கொடுப்பாள். எனவே, மேலே குறிப்பிட்டுள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டில் வைத்து வளருங்கள்...செல்வ செழிப்புடன் நிறைந்திருங்கள்...

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!