அயோத்தி ராமர் கோவிலுக்கு மரக்கதவுகள் மற்றும் பல்லக்கை மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் தான் செய்தனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலில் வரும் திங்கள்கிழமை அதாவது ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் சிற்பக் கலைஞர்கள் தான் அயோத்தி ராமர் கோவிலின் கதவுகள் மற்றும் ராமரை கொண்டு செல்லும் பல்லக்கை செய்யும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அந்நிறுவனத்தை நடத்துபவர் ரமேஷ்.
கன்னியாகுமரியை சேர்ந்த இவர் மாமல்லபுரம் அரசு கட்டட சிற்பக்கலை கல்லூரியில் மர சிற்பக்கலை படித்து தற்போது சிற்பக்கூடம் நடத்தி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். இவர் சிற்பங்களை செதுக்குவதற்கு தேவையான மரங்களை ஹைதராபாத் மர விற்பனையாளர் சரத் பாபுவிடம் தான் வாங்குவாராம்.
இதையும் படிங்க: அயோத்தியில் விஐபி தரிசன டிக்கெட்... ராமர் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றும் கேடி கும்பல்!
அதுபோல், ராமர் கோயில் கட்டப்படும் அறக்கட்டளை நிர்வாகத்திடம், கோவிலுக்கான மர வேலைகளை தான் செய்து தருவதாகவும், தன்னுடைய மர வேலையின் வேலைபாடுகள் குறித்து அறக்கட்டளை நிர்வாகத்திடம் கூறியுள்ளார் ரமேஷ். அதன்படி, அவர்கள் கோவிலின் மாதிரி வரைபடத்தை ரமேஷிடம் கொடுத்து, அதன் மினியேச்சரை மரத்தால் செய்து தரும்படி கூறினர். அவரும் அதனை
செய்து கொடுத்தார். அதனை பார்த்த அறக்கட்டளை நிர்வாகத்தினர், கோலிலுக்கு கதவுகள் செய்யும் வேலையை இவரிடம் ஒப்படைத்ததாக ரமேஷ் கூறினார்.
இதையும் படிங்க: அயோத்தி கோயில் கும்பாபிஷேகம்.. சீதா தேவிக்கு வாழை நார் புடவை அனுப்பிய அனகாபுத்தூர் நெசவு குழு..
இதனையடுத்து, அவர் தனது 40 தமிழக கலைஞர்களிடன் உத்தரப் பிரதேசத்திற்கு சென்று அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கி கடந்த வருடம் மே மாதம் பணிகளை துவங்கியதாக கூறினார். மேலும் இவர்கள் கோவிலின் பணிக்காக கடும் வெயில், குளிர் என்று பார்க்காமல் தினமும் 12 மணி நேரம் வேலை செய்தத்காக ரமேஷ் கூறினார். முக்கியமாக அரைக்கட்டளை நிர்வாகம் தான் இவர்களுக்கு கோவிலின் எல்லா கதவுகளுக்கான வடிவமைப்பு வரைபடத்தை கொடுத்ததாக கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆக, இவர்கள் இக்கோவிலுக்காக மொத்தம் 48 கதவுகள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, கோவிலின் கர்ப்பகிரஹத்தில் பிரதிஷ்டை அன்று ராமர் சிலையை கொண்டு செல்வதற்காக 3 அடி உயரம், 2 அடி அங்குலத்தில் பல்லாக்கை ஒரே நாள் செய்துள்ளனர். அதுபோல், வேறு நிறுவனத்தினர் தான் கதவுகளுக்கு செப்பு தகடு பொருத்தி, தங்கம் முலாம் பூசினர் என்பது குறிப்பிடத்தக்கது.