பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ள தி.நகர் பெருமாள் கோயில்.. இதுவரை எவ்வளவு நன்கொடை வந்துள்ளது?

By Ramya s  |  First Published Sep 29, 2023, 9:13 AM IST

தி.நகர் பெருமாள் கோயில் விரிவாக்க பணிகளுக்கு இதுவரை ரூ.19 கோடி நன்கொடை வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது


சென்னை தி.நகர், வெங்கட நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த கோயிலை சுற்றி அமைந்துள்ள 3 பேருக்கு சொந்தமான ரூ.35 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் பரப்பளவிலான இடங்களை வாங்கி விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

3 ஆண்டுகளுக்குள் இந்த பணிகளை முடிக்கவும் திருப்பதி தேவஸ்தான முடிவு செய்துள்ளது. இதற்காக கோயில் அருகே உள்ள நிலங்களை வாங்கும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த கோயில் விரிவாக்க பணிகளுக்கு ரூ.14 கோடி செலவாகௌம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே நிதி திரட்டும் பணியும் நடந்து வருகிறது. அதன்படி இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நன்கொடையாக நிதி பெறப்பட்டு வருகிறது. மேலும் இந்த பணிகளுக்காக பூதான் என்ற திட்டம் ஒன்றையும் தேவஸ்தான நிர்வாகம் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் இந்த கோயில் விரிவாக்க பணிகளுக்கு இதுவரை ரூ.19 கோடி நன்கொடை வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நேற்று திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக ஏ.ஜே. சேகர் 3-வது முறையாக நியமிக்கப்பட்டார். அவருக்கு தி.நகரில் உள்ள பெருமாள் கோயிலில், அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை தொடர்ந்து கருணாகர் ரெட்டி மற்றும் ஏ.ஜே சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது “ தமிழ்நாட்டில் இருந்து பல ஆண்டுகளாக பக்தர்கள் திருப்பதிக்கு நடைபாதை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக வேலூர் - திருப்பதி, பெரியபாளையம் - திருப்பதி சாலையில் தங்கும் சத்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு 25 கி.மீ-க்கும் இந்த சத்திரங்கள் அமைக்கப்பட உள்ளது. இங்கு 200 பக்தர்கள் வரை தங்கி, சமைத்து சாப்பிடும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

திருமலை தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும். தி.நகர் பெருமாள் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது. தற்போது 5 கிரௌண்டில் உள்ள இந்த கோயில், 11 கிரௌண்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த கோயில் கட்டுவதற்காக இதுவரை 19 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் பூமி பூஜை போடப்பட உள்ளது. தமிழகத்தில் திருப்பதி தேவஸ்தான ஆன்மீக பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உறுதுணையக இருந்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.

click me!