சதுரகிரி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி: வனத்துறை அறிவிப்பு

By SG Balan  |  First Published Sep 24, 2023, 10:03 AM IST

கோவில் நிர்வாகமும் வனத்துறையும் சதுரகிரி யாத்திரை செல்லும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இந்த கோவிலில் விசேஷ வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கப்பபட்டுள்ளது.

பக்தர்கள் மலையேறிச் செல்ல காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் வழியில் உள்ள மலைப்பாதைகளில் உள்ள நீர்நிலைகளில் குளிப்பதற்குத் தடை உள்ளதாகவும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

பிரக்யான் ரோவர் நிலவில் தேசியச் சின்னத்தை தெளிவாகப் பதிவு செய்யவில்லை: இஸ்ரோ தகவல்

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்குக் கொண்டு செல்லக்க கூடாது, அனுமதிக்கப்பட்ட நாட்களிலும் எதிர்பாராத விதமாக பலத்த மழை பெய்தாலோ, நீரோடைகளில் அதிக நீர்வரத்து இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என பல்வேறு நிபந்தனைகளையும் வனத்துறை அறிவித்திருக்கிறது.

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்களில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். சதுரகிரி யாத்திரை செல்லும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் வனத்துறையும் செய்துள்ளன.

சதுரகிரி யாத்திரை செல்லும் பக்தர்கள் வனத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி சென்றுவர வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருக்கவேண்டும்.

ஒரே மாதத்தில் 5 மரணங்கள்... அழிவின் விளம்பில் அரிய வகை இமாலய கஸ்தூரி மான்கள்

click me!