நீங்கள் செய்வினை, ஏவல், பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா..? இல்லையா..? என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அவை..
பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் ஆகியவை மற்றவர்களுக்கு கெட்ட காரியங்கள் நடப்பதற்காக செய்யப்படும். இதை சிலர் மூட நம்பிக்கை என்று பலர் நினைத்து ஒதுக்குகிறார்கள். ஆனால், இந்த மாதிரி செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல கெட்ட விஷயங்கள் நடக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம் அல்லது பார்த்து இருக்கலாம்.
பொதுவாகவே, செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல், மனம், பொருளாதார ரீதியான பாதிப்புகள், இழப்புகள் ஆகியவற்றை சந்திப்பார்கள். ஆனால் இது செய்வினையால் தான் வந்தது என்று அவர்களுக்கு தெரியாது. இந்நிலையில், நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை சில குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அவை..
உடல் மற்றும் மனநல பிரச்சனைகள்:
நீங்கள் கெட்ட சக்தியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்றால் முதலில் உங்களுக்கு உடல் மற்றும் மனநல பிரச்சனைகள் தான் ஏற்படும். நீண்ட நாட்களாக இருக்கும் உடல் சோர்வு, தூக்கமின்மை, காரணமே இல்லாமல் மனதிற்குள் ஒரு விதமான பதற்றம், பய உணர்வு, கெட்ட எண்ணம் போன்ற உணர்வுள் ஏற்படும்.
துரதிர்ஷ்ட சூழ்நிலைகள்:
நீங்கள் பில்லி, சூனியம், செய்வினை போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் அடுத்தடுத்து துரதிர்ஷ்டகரமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். உதாரணமாக, நீங்கள் செய்யும் எந்தவொரு காரியங்கள் அல்லது முயற்சிகள் தோல்வியில் தான் முடியும். மேலும் உங்களது கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் பிரயோஜனம் இல்லாமல்
வீணாகும்.
இதையும் படிங்க: “என் காதலன் Happy-யா இருந்தா போதும்” சூனியம் வைக்க ஆபிஸில் இருந்து ரூ.5 கோடி பணத்தை திருடிய பெண்..
கெட்ட எண்ணங்கள்:
நீங்கள் கெட்ட சக்தியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு அடிக்கடி தற்கொலை எண்ணங்கள், நீங்காத கவலைகள், விரக்தியான மனநிலை, உங்களை சுற்றி இருப்போர் உங்களை விட்டு விலகி செல்வதாகவும், நீங்கள் எப்போதுமே தனியாக இருப்பது போலவும் உணர்வீர்கள். இன்னும் சொல்லபோனால், நான் ஏன், எதற்காக வாழ்கிறேன் என்ற வெறுப்புணர்வு உங்களுக்கு ஏற்படடும்.
இதையும் படிங்க: வீட்டிற்கு இந்த உயிரினங்கள் வருகிறதா? அப்போ நிச்சயம் செய்வினை இருக்கு!! கவனமாக இருங்க!!
சண்டை சச்சரவுகள்:
நீங்கள் காரணமே இல்லாமல் மோதல்களை சந்திக்கிறீர்களா.. காரணமே இல்லாமல் குடும்பத்தில் சண்டைகள், சச்சரவுகள்..சொல்ல போனால், வீட்டில் நிம்மதியே இல்லாத சூழல், உங்களை சுற்றி எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனைகள்.. இதுபோன்ற பல பிரச்சனைகளை நீங்கள் சந்திப்பதற்கு ஒரே காரணம் பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்ற தீய சக்திகள் தான்.
கெட்ட கனவுகள்:
நீங்கள் பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தொடர்ந்து கெட்ட கனவுகள் வரும். அதுவும் கனவில் யாராவது உங்களை துரத்துவது அல்லது தாக்குவது போன்றவை கூட நடக்கலாம். சில சமயங்களில் இந்த கெட்ட கனவுகள் நிஜத்தில் நடப்பத போல் உணர்வு இருக்கும். ஆனால் அது நிஜமல்ல.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D