உங்க வீட்டில் சாம்பிராணி போட்டால் முதல்ல 'இத' படிங்க.. அப்புறம் போடுங்க! உங்க நல்லதுக்கு தான்!

By Kalai Selvi  |  First Published Apr 18, 2024, 7:41 PM IST

வீட்டில் சாம்பிராணி போடுவது வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை, ஹோமம் செய்ததற்கு சமம். மேலும், ஹோமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை, சாம்பிராணி போடுவதன் மூலம் நாம் பெறலாம்.


இந்து மதத்தில் சாம்பிராணிக்கு தனி சிறப்பு உண்டு. அதுபோல, வீட்டில் சாம்பிராணி போடுவது வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை, ஒரு ஹோமம் செய்ததற்கு சமம். மேலும், ஹோமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை சாம்பிராணி போடுவதன் மூலம் நாம் பெறலாம். அதுமட்டுமின்றி, இதன் பின்னால், பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஆனால், அதுகுறித்து பலரும் தெரிவதில்லை.

பொதுவாகவே, வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தலைக்கு குளித்த பிறகு சாம்பிராணி போடுவது வழக்கம். இன்றும் பலர் தங்களது வீடுகளில் இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். மேலும், வீட்டில் ஒவ்வொரு சுப காரியம் செய்யும் போதும், கோயிலில் வழிபாட்டின் போதும், சாம்பிராணி போடுவது வழக்கம்.

Tap to resize

Latest Videos

வீட்டில் சாம்பிராணி போடுவதால் ஜோதிட நன்மைகள்: 
வீட்டில் சாம்பிராணி போடுவதின் மூலம் ஏவல், பில்லி சூனியம், செய்வினை, கண் திருஷ்டி, நவகிரக தோஷம் போன்ற அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதுமட்டுமின்றி எதிரிகள் தொல்லை ஒளியும் இறந்தவர்களின் சாபம் நீங்கும். சாம்பிராணியை வீட்டில் மட்டுமல்லாமல் தொழில் செய்யும் இடத்தில் போடுவதன் மூலம் தொழில் முன்னேற்றம் அடையும், லாபம் கிடைக்கும், வியாபாரம் பெருகும். குறிப்பாக, வீட்டில் எதிர்மறை சக்திகள் நீங்கும். வீட்டில் அமைதியின்மை, தூக்கமின்மை, தீராத நோய்கள் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

இதையும் படிங்க:  3 முறை சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை இப்படி செய்து பாருங்கள்!தரித்திரம் அனைத்தும் வீட்டை விட்டு ஓடி விடும்,

அறிவியல் நன்மைகள்:
அறிவியல் படி, வீட்டில் சாம்பிராணி போடுவதால் வீட்டில் உள்ள கெட்ட காற்று அகலும். அதுமட்டுமின்றி வீட்டில் விஷ ஜந்துக்கள் வரவிடாமல் தடுக்கும். சரி, இப்போது சாம்பிராணியுடன் சிலவற்றை சேர்த்து தூபமிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்..

இதையும் படிங்க: உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனை இருக்கா..? சாம்பிராணி போடுங்கள்..! ஆயுர்வேத மருத்துவ ரகசியம் தெரியுமா..?

சாம்பிராணியுடன் இவற்றை சேர்த்து போடுங்கள் இந்த நன்மைகள் கிடைக்கும்:

  • சாம்பிராணியுடன் தூதுவளை சேர்த்து தூபமிட்டால், வீட்டில் இறைவனின் அருள் எப்போதும் நிலைத்து நிறைந்திருக்கும்.
  • குழந்தைப் பேறு உண்டாக, சாம்பிராணியுடன் அகில் சேர்த்து தூபமிடுங்கள்.
  • வீட்டில் சாம்பிராணி போடும்போது சந்தனத்தையும் சேர்த்து போடுங்கள். இதனால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
  • நவகிரக தோஷங்கள் நீங்க சாம்பிராணி உடன் அருகம்புல் பொடியை சேர்த்து தூபம் ஈடுங்கள்.
  • நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமென்றால், சாம்பிராணியுடன் வெட்டிவேரை போட்டு தூபமிட வேண்டும்.
  • சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட்டால் பல நோய்கள் நீங்கும்.
  • எதிரிகள் தொல்லை நீங்க சாம்பிராணியுடன் வெண்கடுகை போட்டு தூபமிடுங்கள்.
  • சாம்பிராணியுடன் ஜவ்வாதி போட்டு தூபமிட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
  • பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் விலக வேப்பம்பட்டையை சாம்பிராணியில் போட்டு தூபமிடுங்கள்.
  • சாம்பிராணியுடன் நாய் கடுகை சேர்த்து தூபமிட்டால் துரோகிகள் உங்களை விட்டு ஒழிவார்கள்
  • காய்ந்த துளசியை சாம்பிராணியில் போட்டு தூபமிட்டால், திருமண தடை நீங்கும்
  • மருதாணி இலைப் பொடியை சாம்பிராணியுடன் சேர்த்து தூபமிட்டால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
  • சாம்பிராணி போடும் போது அதில், வெண்கடுகு, நாய் கடுகு, மருதாணி விதை, அருகம்புல் ஆகியவற்றை தூபம் போட்டு வந்தால் உங்கள் வாழ்க்கை மற்றும் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் அழிக்கப்படும்.
  • வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, அருகம்புல், வில்வ இலை, வேப்ப இலை, சாம்பிராணி ஆகியவற்றை பொடியாக செய்து வீட்டில் தூபமிட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள், கண் திருஷ்டி, சண்டை சச்சரவுகள், நிம்மதியின்மை போன்றவற்றிற்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!