Chithirai Month Baby : சித்திரையில் குழந்தை பிறந்தால் வீட்டிற்கு ஆகாதா..? உண்மை என்ன..??

By Kalai Selvi  |  First Published Apr 18, 2024, 10:31 AM IST

பொதுவாகவே, 'சித்திரை மாதம் பிறந்த குழந்தை வீட்டிற்கு, தந்தைக்கு ஆகாது' என்று கூறுகிறார்கள். இது உண்மையா..? ஏன் அப்படி சொல்லுகிறார்கள் என்று இப்போது நாம் பார்க்கலாம்.


பொதுவாகவே, 'சித்திரை மாதம் பிறந்த குழந்தை வீட்டிற்கு, தந்தைக்கு ஆகாது' என்று கூறுகிறார்கள். இது உண்மையா..? ஏன் அப்படி சொல்லுகிறார்கள் என்று இப்போது நாம் பார்க்கலாம். இப்படி சொல்வது கண்டிப்பாக உண்மை அல்ல... ஏனென்றால்,  சித்திரை மாதம் என்றாலே, கடுமையான வெயில் காலம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அக்னி நட்சத்திரம் வரும் மாதம். சாதாரணமாகவே, மனிதர்களால் இந்த மாதத்தின் வெயிலை தாங்கிக் கொள்ளவே முடியாது. 

அப்படி இருக்கையில், ஒரு கர்ப்பிணி பெண் வயிற்றில் குழந்தை வைத்துக் கொண்டு இந்த வெயிலை எப்படி தாங்கிக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி, இந்த நேரத்தில் பிரசவிப்பது என்பது ரொம்பவேகொடுமையானது என்றே சொல்லலாம். மேலும் தாய், குழந்தை இரண்டு பேருக்கும் புழுக்கமாகவே இருக்கும். குறிப்பாக, புதிதாக பிறந்த குழந்தையால் வெப்பத்தை தாங்கிக் கொள்ளவே முடியாது; இந்த வெப்பம் அவர்களுக்கு துன்பத்தையே கொடுக்கும். 

Tap to resize

Latest Videos

அதுபோல, இந்த சித்திரை மாத உஷ்ணத்தால் அம்மை போன்ற கடுமையான நோய்கள் வரும். அது தாயே பாதித்தால் குழந்தைக்கு முடியாமல் போகும். இந்த காரணத்திற்காக தான் நம் முன்னோர்கள் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது நல்லதல்ல என்று இப்படி சொல்லி வைத்துள்ளார்கள்..

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் பிறந்த குழந்தைக்கு  எண்ணெய் மசாஜ் செய்யலாமா..?  அதன் நன்மைகள் என்ன..??

ஜோதிடம் சொல்வது என்ன?
ஆனால் ஜோதிடத்தின்படி, சித்திரையில் பிறந்த குழந்தை அழகிலும், வீரத்திலும், குணத்திலும், திறமையிலும் என எல்லா விதத்திலும் சிறந்து விளங்குவார்கள். ஏனென்றால், சித்திரை மாதத்தில்தான் சூரிய பகவான் மேஷ ராசியிலே உச்சத்தில் பிரவேசிப்பார். இப்படி இருக்கையில் ஜாதகம் படி, இந்த சமயத்தில் பிறந்த குழந்தை அதிகாரம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாகவும், பலருக்கு எஜமானராகவும் இருப்பார்களாம். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி...

இதையும் படிங்க:  சித்திரை மாத ராசி பலன்கள் 2024 : உச்சத்தை தொடும் டாப் 5 ராசிகள்..இதுல உங்க ராசி இருக்கா..?

பெண் குழந்தை நல்லதல்ல.. அது உண்மையா..?
சொல்லபோனால், சித்திரை மாதத்தில் பிறக்கும் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி.. வீரத்திலும் நியாயம், தர்மம் என எதுவாக இருந்தாலும் இதுதான் சரி... இதுதான் தவறு என்று நேரிடையாக சொல்லும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்களாம்.

ஆகையால் தான், இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கக்கூடாது என்று நினைத்தார்களாம். ஏனெனில், அந்தகால கட்டத்தில், பெண் என்பவள் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற கட்டுபாடுகள் அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது. இதனால் தான் இம்மாதத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள். காரணம், அவள் உண்மையை உரக்க சொல்லும் ஆற்றல் உடையவளாக இருப்பாள். அது புகுந்த வீட்டிற்கு ஏற்புடையதாக இருக்காது என்று எண்ணினார்கள். ஆக, சித்திரையில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்வது உண்மை அல்ல. குறிப்பாக பெண் குழந்தை பிறந்தால் ஏதும் ஆகாது...

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!