திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 250 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து தானியங்கள் மற்றும் மலர்களை தானே பயிரிட்டு வழங்கவும் முன்வந்திருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் முரளி கிருஷ்ணா.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்துக்கு பக்தர் ஒருவர் 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா திருப்பதி ஏழுமலையானின் பரம பக்தர். திருப்பதி மாவட்டம் டெக்கலி, நெல்லூர் மாவட்டம் உள்ள போத்திகுண்டா ஆகிய பகுதிகளில் இவருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் இருந்தன.
இந்த ஊர்களில் உள்ள மொத்தம் 250 ஏக்கர் நிலத்தை இவர் திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார். திங்கட்கிழமை நிலத்திற்கான ஆவணங்களை தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.
வேண்டாம்! கோமியம் குடிப்பது உடம்புக்கு நல்லதல்ல: கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
முரளி கிருஷ்ணா கொடுத்த ஆவணங்களை ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி, திருமலைத் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, சாய்தாபுரம், டெக்கலி ஊர்களைச் சேர்ந்த் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து முரளி கிருஷ்ணா அளித்த 250 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்தின் பெயரில் பத்திர பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி அறிவுறுத்தி இருக்கிறார்.
250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக கொடுத்த முரளி கிருஷ்ணா அந்த நிலத்தில் தானே தானியங்கள், மலர்கள் ஆகியவற்றை பயிரிட்டு தேவஸ்தானத்திற்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Solar Eclipse 2023: பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹைபிரிட் சூரிய கிரகணம்! என்ன விசித்திரம்?