விரல்ல செம்பு மோதிரம் போட்டால் எதிர்மறை சக்தி ஓடிடுமா.. ஜோதிடம் சொல்வது என்ன?

By Dinesh TG  |  First Published Oct 6, 2022, 6:36 PM IST

உலோகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உங்களுக்கு உதவும் . பழமை வாய்ந்த உலோகங்களில்  முக்கியமானது தாமிரம் அதாவது செம்பு என்று சொல்வார்கள்.


உலோகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உங்களுக்கு உதவும் . பழமை வாய்ந்த உலோகங்களில்  முக்கியமானது தாமிரம் அதாவது செம்பு என்று சொல்வார்கள். 

வேத சாஸ்திரம் சொல்வது என்ன?

Tap to resize

Latest Videos

வேத ஜோதிட கருத்துப்படி செம்பு என்பது வியாழன் கோளையும், சந்திரன் போன்றவற்றை குறிக்கிறது. நமது உடலில் உள்ள ஐம்பெரும் பூதங்களான நீர், கபம் இரண்டையும் சமநிலைபடுத்துகிறது. 

வேத சாஸ்திரங்களை எடுத்துக் கொண்டால் செம்பு உலோகமாக்கி அணிபவர்களுக்கு  வாழ்க்கையில் அதிர்ஷ்டம்,  செல்வம் மற்றும் மகிழ்ச்சி  என்று எல்லாம் கை கூடி வரும் என்கிறது. செம்பு அணிகலனை உடலில்  அணியும் போது  உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஜாதகத்தில் சந்திரனையும் கோளையும் சமாதானம் செய்ய இதை அணியவும் சொல்லப்படுகிறது.

தங்கம் வெள்ளி போன்ற உலோக மோதிரங்களை அணிவதை விட காப்பர் என்றழைக்கப்படும் தாமிர மோதிரம் உங்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். 

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்

இது என்னால் முடியாது. இதை எப்படி செய்ய முடியும் என்னும் எதிர்மறை ஆற்றலை இல்லாமல் செய்வதில் செம்பு முக்கியமானது.  செம்பு அணிவதன் மூலம் மட்டும் அல்ல வீட்டில் செம்பு நிறைந்த பாத்திரங்கள் இருந்தாலும்  அது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அழித்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கிறது. 

செம்பு பொருள்கள் விலை உயர்ந்தவை என்றாலும் அது அழகுக்காக பலரும் பயன்படுத்துவதுண்டு. ஆனால் அவர்கள் தங்களை அறியாமல் நேர்மறை ஆற்றலை பெறுகிறார்கள். உண்மையில் உள்ளத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் 

குழப்பங்கள் இல்லாத தெளிவான நிலை

எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வருவது இயல்பு என்றாலும் அதை சமாளிக்க முடியாது என்று மனதில் பெரும் அச்சுறுத்தலோ குழப்பமோ இருந்தால் அது உங்களை மன அமைதி இல்லாமல் ஆக்க செய்யும். சுண்டு விரலில் செம்பு மோதிரத்தை  அணிந்தால் உங்கள் மனம் குழப்பமில்லாமல் இருக்கும். 

செம்பு மோதிரத்தை தண்ணீரில் போட்டால் அது ஆற்றலை கிரகிக்கும் வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம். 

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது .. ஏன் புதனுக்கு அவ்வளவு முக்கியத்துவம்!

 செம்பு பாத்திரத்தை போடுவதற்கு முன்பு அதை பூஜை அறையில் வைத்து இறைவனிடம் வேண்டுதல் நடத்தி பிறகு அணிந்தால் பலன்கள் கொடுக்கும்.  இவை ஆன்மிகம் என்பதை தாண்டி ஆரோக்கியத்திலும் அதிக நன்மை கிடைக்கும். 

கணவன் மனைவி சச்சரவுகளை தீர்க்கும் பிரயாக்ராஜ் புண்ணிய தலம்..

செம்பு ஆரோக்கிய நன்மைகள்

செம்பு மோதிரம் அணிவது கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க செய்யும் என்று சொல்லப்படுகிறது. விரல்களில் செம்பு மோதிரம் அணிவது உங்கள் உடலில் நச்சுப்பொருள்களின் அளவு அதிகரிப்பதை குறைக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். 

 செம்பு அமைதியை உண்டு செய்யும்

செம்பு மன அழுத்தத்தை குறைத்து  கோபத்தையும் விரக்தியையும் குறைக்கும்.  செம்பு உடலில் உஷ்ணத்தை  சமநிலையில் வைத்திருக்கும். சூரியனால் உண்டாகும் விளைவுகளை  சரி செய்து உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும். 

click me!