ஆவணி பௌர்ணமி 2024 : இப்படி விரதம் இருந்து வழிபடுங்க.. கடன் தொல்லை படிப்படியாக குறையும்!

By Kalai Selvi  |  First Published Aug 19, 2024, 11:17 AM IST

avani pournami 2024 : இன்று ஆவணி பௌர்ணமி இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் எண் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.


பொதுவாகவே பிற நாட்களில் செய்யும் பூஜை, வழிபாடுகளை விட எல்லா மாதங்களிலும் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் செய்யும் வழிபாடுகளுக்கு சக்தி அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதுவும் குறிப்பாக பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வது, வீட்டில் விளக்கேற்றி வழிபாடுகள் செய்வது, பூஜைகள் செய்வது என்னை எப்படி வழிபட்டாலும் அதற்கான பலன்கள் இரண்டு மடங்காக கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. எனவே, பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து விதமான செல்வ வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் ஒவ்வொரு பௌர்ணமி வழிபாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஆவணி பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் தீர்க்க முடியாத கடன் பிரச்சனை தீரும், பண வரவு அதிகரிக்கும், திருமண யோகம் கிடைக்கும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஆவணி அவிட்டத்தில்  பூணூல் போடுவது ஏன்? துன்பங்கள் விலக்கும் கள்ளப்பூணூல் உள்ளிட்ட 4 பூணூல்களின் விளக்கம் இதோ!!

அந்த வகையில், இந்த 2024 ஆம் ஆண்டு ஆவணி பௌர்ணமி இன்று (ஆகஸ்ட் 19) திங்கட்கிழமை. இன்று தான் ஆவணி அவிட்டம், சகோதரர் பாசத்தை போற்றும் ரக்ஷா பந்தன் ஆகியவை சேர்ந்தே வருவதால் இந்த ஆண்டு ஆவணி பௌர்ணமி மிகவும் விசேஷமானது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க:  இன்று ஆவணி பௌர்ணமி... கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்!

2024 ஆவணி பௌர்ணமி விரதமும் பலன்களும்:

இன்று ஆவணி பௌர்ணமி என்பதால், இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொதுவாகவே, ஒவ்வொரு பௌர்ணமி நாளில் மகா திரிபுரசுந்தரி ஆதிபராசக்தியாக 16 வடிவங்களில் அருள் புரிவதாக ஐதீகம். ஆதலால் பௌர்ணமி நாளில் அம்பிகையை வழிபட்டால் கிரக தோஷங்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதுவும் இந்த ஆவணி பௌர்ணமி ஆனது அவிட்ட நட்சத்திரத்துடன் சேர்ந்து வருவதால், இந்நாளில், அம்பிகைக்கு விளக்கேற்றி, நெய் கலந்து சாதத்தை நைவேந்தியமாக படைத்து வழிபட்டால் செல்வம் பெருகும், தீராத கடனும் தீரும் என்பது ஐதீகம். மேலும் இன்று ஆவணி அவிட்டம் என்பதால் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி காயத்ரி மந்திரத்தையே பாராயம் செய்தால், வீட்டில் செல்வ வளம் பெருகும், மன அமைதி கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!