Avani Month 2024 : இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் என்னென்ன நாட்களில், என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை பற்றி இங்கு நாம் விரிவாக பார்க்கலாம்.
ஆவணி மாதம் தமிழ் மாதத்தின் ஐந்தாவது மாதம் ஆகும். சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலம் இந்த ஆவணி மாதத்தில் தான். அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி செப்டம்பர் 16ஆம் தேதி திங்கள்கிழமை வரை உள்ளது. இந்த ஆண்டு ஆவணி மாதம் விரதம் பற்றி விசேஷங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது. எனவே, இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் என்னென்ன நாட்களில், என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை பற்றி இங்கு நாம் விரிவாக பார்க்கலாம்.
2024 ஆவணி மாதம் முக்கிய விசேஷங்கள்:
19 ஆகஸ்ட் (ஆவணி 3) திங்கள்கிழமை - ஆவணி அவிட்டம்
20 ஆகஸ்ட் (ஆவணி 4) செவ்வாய்க்கிழமை - காயத்ரி ஜெபம்
22 ஆகஸ்ட் (ஆவணி 6) வியாழக்கிழமை - மகா சங்கடஹர சதுர்த்தி
26 ஆகஸ்ட் (ஆவணி 10) திங்கள்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி
27 ஆகஸ்ட் (ஆவணி 11) செவ்வாய்க்கிழமை - பஞ்ச ராத்திர ஜெயந்தி
7 செப்டம்பர் (ஆவணி 22) சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி
15 செப்டம்பர் (ஆவணி 30) ஞாயிற்றுக்கிழமை - ஓணம் பண்டிகை