ஆஷாட பஞ்சமி.. வாராஹி அம்மனை இன்று இப்படி வழிபட்டால் தீராத கடனும் தீரும்!!

By Asianet Tamil  |  First Published Jul 10, 2024, 9:16 AM IST

மனிதர்களின் வாழ்க்கையில் கடன், நோய், வம்பு வழக்கு இருக்கக் கூடாது. ஒருசிலருக்கு நோய் பாடாய் படுத்தும் சிலருக்கோ எதிரிகள் பிரச்சினை தொடர்கதையாக இருக்கும். கடனும் நோயும் நீங்குவதற்கு பஞ்சமி திதியில் வாராஹி தேவியை வழிபட்டால் நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆஷாட பஞ்சமியான இன்று அன்னை வாராஹியை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.


 

வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வாராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள். வராஹி தேவி, தேவி புராணங்களின் படி ஸப்த கன்னியர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். நம்முடைய வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள். ஆஷாட பஞ்சமி தினமான இன்று நம்முடைய செல்வ வளம் அதிகரிக்க எளிமையான பரிகாரத்தை செய்ய வேண்டும்.

எந்த ஒரு பரிகாரமும் நம்பிக்கையுடன் செய்தால் நல்லதாகவே நடைபெறும். நமது எண்ணம் போல வாழ்வு என்பது இதைத்தான் சொல்கிறார்கள். நேர்மறை எண்ணங்களுடன் நாம் வாராஹி அம்மனை வழிபட்டால் காரிய வெற்றி உண்டாகும். எளிமையான சில பரிகாரங்களை இந்த நாளில் செய்தால் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை நீங்கும்.

Tap to resize

Latest Videos

undefined

'A' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்குதா..? அப்போ முதல்ல 'இத' படிங்க..!

ஆஷாட பஞ்சமி திதி காலை 8:30 மணிக்கு மேல் தொடங்குகிறது. நம்முடைய வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டு வாராஹி அம்மனை மனதார அழைக்க வேண்டும். ஒரு கண்ணாடி பாட்டில் எடுத்து அதில் ஒரு விரலி மஞ்சள், 1 ரூபாய் நாணயங்கள் 11 ரூபாய் போட வேண்டும். ஏலக்காய் 11 ஜாதிக்காய் 1 , சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து அந்த பாட்டிலை மூடி நம்முடைய வீட்டில் உள்ள அரிசி பானையில் வைக்க வேண்டும்.

இந்த பரிகாரம் செய்யும் நாம் வாராஹி அம்மனை முழு மனதோடு நினைத்து கடன் பிரச்சினை நீங்க வேண்டும், வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். அரிசி பானையில் வைக்கப்பட்ட  கண்ணாடி பாட்டிலை அடுத்த வளர்பிறை பஞ்சமி அன்று தான் எடுக்க வேண்டும்.  பாட்டிலை திறந்து அதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். மீதம் உள்ள ஏலக்காய் உள்ளிட்ட  பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் சாம்பிராணி போடும்பொழுது இந்த பொடியையும் சேர்த்து போட வேண்டும்.

இந்த 5 ராசிக்காரங்க முட்டாள்தனத்தால் அடிக்கடி ஏமாறுவாங்க.. இதுல உங்க ராசி இருக்கா..?

ஒரு ரூபாய் நாணயங்களை வாராஹி அம்மன் உண்டியலில் போட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு அதிக செலவு இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் செய்யப்போகிறோம் என்பதால் எளிமையானது. இன்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் அடுத்து உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றத்தை கண் கூடாக பார்ப்பீர்கள்.

click me!