சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தவறுதலாக கூட இதுபோன்ற செயல்களை செய்யாதீங்க..! மீறினால் அவ்ளோதான்..!!

Published : Jul 08, 2024, 06:18 PM ISTUpdated : Jul 09, 2024, 10:57 AM IST
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தவறுதலாக கூட இதுபோன்ற செயல்களை செய்யாதீங்க..! மீறினால் அவ்ளோதான்..!!

சுருக்கம்

Things To Avoid After Sunset : சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சில விஷயங்களை செய்தால் அது வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகளை உண்டாக்கும். அது என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு நாளும் பகல் மற்றும் இரவின் வெவ்வேறு நேரங்கள் குறித்து பல முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, எந்த நேரத்தில் எந்த வேலையை செய்ய வேண்டும் என்றும், செய்யக்கூடாது என்றும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

வாஸ்துபடி, சூரியன் மறையும் சமயத்தில் சில விஷயங்களை செய்யக்கூடாது. மீறினால் எதிர்மறை தாக்கும். மேலும் பனகிழப்பு நோய்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக அவற்றை செய்தால் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி கோபப்படுவார்.

இதையும் படிங்க:  குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

அது ஏன் அப்படி?

வாஸ்து சாஸ்திரம் படி, சூரிய அஸ்தமனத்தின் போது எதிர்மறை சக்திகள் செயல்படுகின்றன. எனவே, இந்த காலகட்டத்தில் சில விஷயங்களையும் செய்யக்கூடாது. மேலும், இந்த நேரத்தில் தெய்வங்களை வணங்க வேண்டும். இப்படி செய்தால் எதிர்மறை சக்திகளின் தாக்கம் இருக்காது. எனவே, மாலை நேரத்தில் எந்தெந்த விஷயங்களை செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இந்த 3 ராசிக்காரங்க திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போகவே கூடாதாம்!! மீறி போனால் அவ்வளவுதான்!! 

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இவற்றை ஒருபோதும் செய்யாதீர்கள்:

1. மாலை நேரத்தில் வீட்டின் பிரதான கதவை ஒருபோது மூடி வைக்காதீர்கள். திறந்து வையுங்கள். ஏனெனில், இந்த நேரத்தில் தான் லட்சுமி தேவி வீட்டுக்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. இத்தகைய சூழலில், கதவை மூடி வைத்திருந்தால் லட்சுமிதேவி வீட்டில் வருவது தடுக்கப்படும் மற்றும் இதனால் வீட்டில் வருமை வரும்.

2. மாலையில் துளசி செடியின் கீழ் தீபம் ஏற்றினால் மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. ஆனால,  இந்த நேரத்தில் தவறுதலாக கூட துளசி செடியை தொடாதீர்கள். மீறினால், லட்சுமிதேவி கோபப்படுவார்.

3. மாலை நேரத்தில் யாருக்கும் பூண்டு வெங்காயம், புளி, உப்பு ஊசி ஆகியவற்றை கொடுக்க கூடாது. 

4. மாலையில் பிச்சைக்காரனை வெறும் கையுடன் ஒருபோதும் திருப்பி அனுப்பாதீர்கள். உங்கள் தகுதிக்கு ஏற்ப அவருக்கு ஏதாவது தானம் செய்யுங்கள்.

5. அதுபோல மாலை வேலையில் பண பரிவர்த்தனை ஒருபோதும் செய்யாதீர்கள். அதாவது யாருக்கும் கடன் கொடுக்கவோ அல்லது வாங்கவோ கூடாது. முக்கியமாக, இந்த நேரத்தில் கடன் கொடுத்தால் கொடுத்த பணம் திரும்ப கிடைக்காது என்று நம்பப்படுகிறது.

6. முக்கியமாக மாலையில் வீட்டில் தூங்கவோ அல்லது சண்டையிடவோ கூடாது. ஏனெனில், லட்சுமி தேவி இந்த சமயத்தில் வீட்டுக்கு வருவதால், இந்த நேரத்தில் சண்டையிட்டாலோ அல்லது தூங்கினாலோ உங்கள் வீட்டில் வறுமை வரும். மேலும், நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!