செல்வ வளத்தை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்... எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்..?

By Kalai Selvi  |  First Published Jul 9, 2024, 10:20 AM IST

Benefits of Pachai Karpooram : வீட்டில் நிம்மதியின்மை, கெட்ட சக்திகள் இருப்பது, கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவற்றை விலக்க பச்சை கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்து மதத்தில் லட்சுமி தேவி செல்வத்தின் கடவுளாக கருதப்படுகிறார். கற்பூரம் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பெற்ற பொருளாக கருதப்படுகிறது. பச்சை கற்பூரம் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி நிச்சயம் வந்து அருள் புரிவார் என்பது நம்பிக்கை. வீட்டில் எதிர்மறை, கண் திருஷ்டி, தீய சக்திகள் போன்றவற்றை விலக்க கற்பூரத்தை கொண்டு பரிகாரம் செய்யலாம். அப்படியானால் இந்த பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  Camphor : என்னங்க சொல்றீங்க..கற்பூர வாசனையை சுவாசித்தால் நல்லதா.! உண்மையை தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க:  கற்பூரத்தை எப்போதும் உங்கள் பாக்கெட்டில் வைங்க; பணத்திற்கு ஒருபோதும் தட்டுப்பாடு வராது!

பச்சை கற்பூரத்தை கொண்டு பரிகாரம்:

  • பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது என்பது நம்பிக்கை. இதற்கு ஒரு தட்டில் இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
  • பச்சை கற்பூரத்தின் வாசனை வீட்டில் நிறைந்திருந்தால் லட்சுமி தேவி அருள் வீட்டில் எப்போதும் இருக்கும். அதுமட்டுமின்றி, பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மையும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை வைத்து, அந்த துணியை கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் செய்து வந்தால் வீட்டில் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
  • மேலும் பச்சை கற்பூரத்தின் இருந்து வரும் வாசனையில் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. ஆகவே வீட்டில் எப்போதும் பச்சை கற்பூரம் வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. 
  • வீட்டில் நிம்மதியின்மை, கெட்ட சக்திகள் இருப்பது, கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவற்றை விலக்க பச்சை கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • முக்கியமாக குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் முழு மனதுடன் வேண்டி வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து, பச்சைக் கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். இப்படி வழக்கமாக செய்து வந்தால் லட்சுமி தேவியும், குபேரனும் அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கி பணவரவையும், நினைத்த காரியத்தை தாராளமாக நிறைவேற்றுவார்கள் என்பது நம்பிக்கை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!