அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை மறந்தும் செய்ய கூடாது தெரியுமா?

By Ma riya  |  First Published May 4, 2023, 5:45 PM IST

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. இந்த கத்தரி வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை முழுவிவரம்.. 


அக்னி நட்சத்திரம் என்றால் கத்திரி வெயில் காலம். அதாவது எப்போதும் உள்ள வெயிலை விட இந்த காலகட்டத்தில் கூடுதலாக வெயில் அடிக்கும். உஷ்ணம் அதிகமாக இருக்கும். இது மே 04ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 04ஆம் தொடங்கி மே 29ஆம் தேதி வரை இருக்கும். இந்த நேரத்தில் சில விஷயங்களை செய்யவே கூடாது. 

மக்களிடையே அக்னி நட்சத்திர காலத்தில் எந்த சுப காரியங்களையும் செய்யக்கூடாது என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. உண்மையில் அந்த விஷயம் ஒரு பழங்கால நம்பிக்கையே தவிர இப்போது பின்பற்ற வேண்டியது இல்லை. சில விஷயங்களை பகுத்தறிந்து செய்வதே நல்லது. முன்புள்ள காலங்களில் மின்சார வசதி ஏதும் கிடையாது. அந்த நேரத்தில் அக்னி நட்சத்திர காலம் மக்களால் சமாளிக்க முடியாததாக இருந்திருக்கும். வெயிலின் தாக்கத்தில் சுப காரியங்களை நடத்தும் போது சிரமங்கள் ஏற்படும் என்பதால் அந்த நேரத்தில் தவிர்த்தனர்.

Latest Videos

undefined

ஜோதிடம் 

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தொழில் நுட்பமும் வளர்ந்து விட்டது. ஆகவே தற்போதைய கால கட்டங்களில் அக்னி நட்சத்திர காலங்களில் கூட சுபகாரியங்கள் தடையில்லாமல் நடத்தப்படுகிறது. ஆனால் ஜோதிட சாஸ்திரம் அக்னி நட்சத்திர காலத்தில் சில சுப காரியங்களை தவிர்க்கவே அறிவுறுத்துகிறது. ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில், குழந்தை வரம், உடல் ஆரோக்கியம், மனக்குழப்பம், கிரக தோஷங்களின் நிவர்த்தி, தலைமை பதவியை வழங்க கூடியவர் சூரியபகவான் தான். 

அக்னி நட்சத்திரம் 

குடும்பத்தின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். அவர் உக்கிரமாக இருக்கும் காலகட்டம் தான் அக்னி நட்சத்திரம். இந்த நேரத்தில் சுப காரியங்களை செய்வது சூரியனின் அருளை பெறுவதில் சிக்கலை உண்டாக்கும். எனவே இந்த காலத்தில் சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என ஜோதிடம் சொல்கிறது. அதேநேரம் சில சுப காரியங்களை அக்னி நட்சத்திரத்தில் செய்யலாம் என ஜோதிடம் அறிவுறுத்துகிறது. 

அக்னி நட்சத்திரம் 2023: என்ன செய்யலாம்? 

வாடகை வீடு மாறுதல், சுபகாரிய பேச்சுவார்த்தை, திருமண விழா, நிச்சயதார்த்தம், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு, பெண் பார்க்க செல்வது, முன்பு கட்டிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடிபுகலாம். 

இதையும் படிங்க: வீட்டிற்கு பாம்பு வருவது நல்லதா? கெட்டதா?

அக்னி நட்சத்திரம் 2023 : செய்யக் கூடாதவை.. 

  • பூமி பூஜை 
  • வீடு கட்டும் பணி  
  • கிணறு வெட்டுவது 
  • விவசாய விதைப்பு பணிகள்
  • மரம் வெட்டுவது
  • குழந்தைகளுக்கு மொட்டை போடுதல், காது குத்துதல்
  • வீட்டு கிரகப்பிரவேசம்
  • பந்தக்காலை நடுவது
  • தெய்வ சிலைகள் பிரதிஷ்டை 

இதையும் படிங்க: சுப காரியங்களை செய்யும் போது தும்மினால் என்னாகும் தெரியுமா? எப்படி தும்மினால் என்ன பலன்!!

click me!