இந்து மதத்தில் பல நம்பிக்கைகள் இருக்கின்றன. அதில் சில விஷயங்கள் மூடநம்பிக்கையாக கருதப்படுகிறது. அந்த வகையில் தும்மல் குறித்தும் சில நம்பிக்கைகள் நிலவி வருகிறது. மக்கள் தும்முவதை எப்போதும் அசுபமாகக் கருதி வருகிறார்கள். குறிப்பாக நீங்கள் சில சுப காரியங்களைச் செய்து, அந்த நேரத்தில் யாராவது தும்மினால் அது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது.
ஒரு இடத்திற்குச் செல்வதற்கு முன் தும்மினால், சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடித்துவிட்டு தான் வெளியே செல்ல வேண்டும் என பெரியவர்கள் கூறுவார்க்ள். நல்ல விஷயம் பேசும் போது ஒரு முறை தும்மினால் அது கெட்டதாகிவிடும் என்பது ஐதீகம். எப்போதுமே தும்முவது ஒரு மோசமான சகுனம் அல்ல.. சில நேரங்களில் அது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
undefined
தும்மல் எப்போது அசுபமானது?
பொதுவாக, ஒருவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது, அந்த நேரத்தில் யாராவது தும்மினால், அந்த காரியம் நன்றால நடக்காது என மக்கள் கருதுகின்றனர். ஒரு முறை மட்டும் தும்மல் வந்தால் இதை கணக்கில் எடுத்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட முறை தும்மல் வந்தால், அது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பயணம் செய்யும் போது ஒருவர் தும்மினால், பயணத்தை சிறிது நேரம் ஒத்திவைக்க வேண்டும்.
பால் காய்ச்சும்போது தும்மினால் அதுவும் தீங்கு விளைவிக்கும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுவது மட்டுமல்லாமல், இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் இழப்பை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
தும்மல் எப்போது நல்லது?
- மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் தும்மினால் நன்மையும் தீமையும் ஏற்படுகிறது. எந்த விலங்கு தும்மல் உங்களுக்கு நல்ல பலனைத் தரும் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
- ஏதேனும் ஒரு சுப காரியத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது மாடு தும்மினால், அந்த வேலையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
- ஒரு நாய் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தும்மினால், அதை நீங்கள் கேட்டால், அது உங்களுக்கு மிகவும் மங்களகரமானது.
- வழியில் யானையைக் கண்டால் அது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி யானையின் தும்மல் ஒலியையும் கேட்டால் அது உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், மேலும் அது சிறப்பான சகுனம்.
- நீங்கள் சாலையில் நடந்துகொண்டிருந்தாலோ அல்லது முக்கியமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலோ யாராவது பின்னால் இருந்து தும்மினால் அந்த வேலை நிச்சயம் நிறைவேறும்.
இதையும் படிங்க: இன்று நரசிம்மர் ஜெயந்தி.. உங்க பணக்கஷ்டம் தீர நரசிம்மரை இப்படி வழிபடுங்க!
ஜோதிடத்தில் தும்மல்;
- சில முக்கிய வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது நீங்கள் 2 முறைக்கு மேல் தும்மினால், அது உங்களுக்கு வந்த பிரச்சனையை தவிர்த்திருப்பதற்கான அறிகுறியாகும்.
- ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிடும் போது தும்மல் வந்தால் விரைவில் அந்த நோய் விரைவில் நீங்கும் என்பது நம்பிக்கை.
- தெற்கு திசையில் நோக்கி நிற்கும்போது தும்மல் வந்தால் மிகவும் நல்லது .குறிப்பாக நீங்கள் ஒரு பயணத்திற்குச் செல்லும் முன்னர் அப்படி நடந்தால் அது மங்களகரமானது.
- வாஸ்து படி, அகஸ்திய முனிவர் மேற்கு திசையின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த திசையில் சனியின் தாக்கம் அதிகம். இந்த திசை சூரிய அஸ்தமனத்தின் திசை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திசையில் நின்று தும்முவது சுபமாக கருதப்படுவதில்லை. இது செல்வத்தை இழக்க வழிவகுக்கிறது.
- வடகிழக்கில் அமர்ந்து தும்மல் வந்தால் மிகவும் சுபமாக இருக்கும். இது உங்கள் வீட்டில் சில சுப காரியங்கள் விரைவில் நடக்கும் என்பதற்கான அறிகுறியாகும். ஆனால் வடகிழக்கு மூலையில் உள்ள கோவிலில் அமர்ந்து தும்மினால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
- நீங்கள் வடக்கு திசையில் நின்று தும்மினால் அல்லது பிறரின் தும்மல் சத்தம் கேட்டாலும் அதுவும் அசுபமானது. நீங்கள் விரைவில் ஒருவருடன் தகராறில் ஈடுபடலாம் என்பதை இது குறிக்கிறது. இது நடந்தால், உங்கள் மீது போதுமான கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமி பூஜைக்கு இத்தனை நன்மைகள் உள்ளதா?