ஓம் நமசிவாய கோஷத்துடன் அரங்கேறிய அவினாசி லிங்கேசுவரர் ஆலய சித்திரை தேரோட்டம்

By Velmurugan sFirst Published May 3, 2023, 1:53 PM IST
Highlights

அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி எனும் கோசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. 
 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான, இக்கோயிலில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த தலமான  இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.

சித்திரை திருவிழா முதல் நிகழ்வாக கோயிலில் கடந்த 25ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் காடசியளிக்கும் வைபவம் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9:30க்கு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் யானை வாகன காட்சி ஆகியவை நடந்தது. யானை வாகனத்தில் சாமி எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து இன்று தேர் திருவிழா நடைபெற்றது.  

வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு

பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேர் படம் பிடிக்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்பு வருகின்ற நான்காம் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.இன்று நடைபெற்ற தேரோடாட்டில் அவிநாசி,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைபெறும்போது தேர் வலம் வரும் வீதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. தேர் திருவிழாவினை முன்னிட்டு திருப்பூரில் இருந்து கோவை செல்லும் மற்றும் கோவையில் இருந்து திருப்பூர் வரும் சாலைகளில் காவல்துறையினர் தற்காலிக மாற்றம் செய்துள்ளனர்.

உடன் பிறந்த தம்பியுடன் கள்ளத்தொடர்பு; மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண்

click me!