சொந்த வீடு கட்ட முடியாமல் கஷ்டப்படுபவர்கள் ஒருமுறையாவது கட்டாயம் செல்ல வேண்டிய கோயில் எது?

By Ma riya  |  First Published Jun 17, 2023, 12:47 PM IST

சொந்த வீடு கட்டுவதை வாழ்நாள் கனவாக வைத்திருக்கும் நபர்கள் ஒரு முறையேனும் இந்த கோயிலுக்கு சென்று திரும்பினால் சொந்த வீட்டை விரைவில் கட்டி முடிப்பார்கள் என்பது ஐதீகம். 


பெரும்பாலானவருக்கும் சொந்தமாக வீடு கட்டி, அதில் குடியேற வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் சொந்த வீடு கட்டும் முயற்சி தடைபட்டு கொண்டே இருக்கும். கடினமாக உழைத்தாலும் கூட சொந்த வீடு கட்டுவது வெறும் கனவாகவே மட்டுமே இருக்கும். இவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில் எது? அங்கு சென்று வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  

செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் கைகூடி வரும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. முருகனின் கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் மூலவரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்பவர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் விரைவில் வரும். 

Tap to resize

Latest Videos

undefined

நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் என்ற ஊருக்கு அருகே அமைந்திருக்கும் திருக்கோயில் திருப்புகலூர் என்ற கிராமத்தில் வாஸ்து கோவில் அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட்டால் சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் வரும் என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலை அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் என்றும் அழைக்கிறார்கள். இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால், வாஸ்து தொடர்பான பிரச்சனைகள் யாவும் தீர்வு என கருதப்படுகிறது. 

எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? 

நீங்கள் அக்னிஸ்வரர் கோயிலுக்கு சென்றால் உங்கள் சொந்த உழைப்பில் கிடைத்த காசை வைத்து புதிய செங்கல் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். அங்கு சென்று அந்த செங்கல் பூஜைகள் செய்து வழிபாடு செய்யுங்கள். பூஜை செய்த செங்கலை உங்களுடைய வீட்டிற்கு கொண்டு வந்துவிடுங்கள். இப்படி அக்னிஸ்வரர் திருக்கோயிலில் வைத்து வழிபட்ட செங்கல் வீட்டுக்கு கொண்டு வரும்போது வாஸ்து தோஷங்கள் நீங்கும்; ஜோதிட ரீதியாக உங்களுக்கு இருக்கிற தடைகள் எல்லாம் நீங்கும்; உங்களுடைய வருமானம் பெருகி வீடு கட்டுவதற்கான யோகமும் வரும் என நம்பப்படுகிறது. 

ஜோதிட ரீதியான தடைகள் இருக்கும் நபர்களால் பணத்தை சேர்த்து வைக்க முடியாது. அவர்களிடம் எல்லா வசதிகளும் இருந்தாலும் வீடு கட்டுவதற்கான நேரம் கை கூடாமல் இருக்கும். சிலருக்கு வீட்டு மனை இருந்தாலும் அதில் வீடு கட்டுவதற்கான பணம் கையில் சேராமல் தடைபடும். இதுபோல சொந்த வீடு கட்டுவதற்கான தடைகளை தொடர்ந்து சந்திப்பவர்கள், வாஸ்து பிரச்சனை உள்ளவர்கள் நிச்சயமாக ஒருமுறையாவது நாகப்பட்டினத்திற்கு சென்று வாஸ்து கோயிலில் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

இதையும் படிங்க: அனுமன் பிறந்த இடமான அஞ்சனேரி மலை உச்சிக்கு செல்ல விரைவில் 'ரோப்வே' அமைக்கத் திட்டம்!!

click me!