இந்த ஆனி அமாவாசையன்று பித்ருதோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
இன்றைய தினத்திலிருந்து ஆனி மாதம் தொடங்கிவிட்டது. இந்நாளில் இம்மாதத்தில்தான் சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும். நாளை சனிக்கிழமை ஆனி அமாவாசை திதி ஆகும். இந்நாளில் நம் முன்னோர்களின் ஆத்துமா சாந்தி அடைய சில பரிகாரங்களை செய்ய வேண்டும். ஏனெனில் மறைந்த நம் முன்னோர்கள் பித்ருக்கள் என்பதால் அவர்களது ஆத்மா சாந்தி அடையாவிட்டால் பித்ருதோஷம் ஏற்படும். அதுபோலவே, ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ருதோஷம் ஏற்படும். எனவே இந்த
ஆனி அமாவாசையன்று பித்ருதோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்த அமாவாசையின் முதல் நாளில் நம் முன்னோர்களை பிராத்திப்பது நல்லது. ஏனெனில் பித்துக்களின் ஆசீர்வாதம் நமக்கு முக்கியம். இவ்வாறு செய்தால் நம் குடும்பத்தில் செழிப்புமும், மகிழ்ச்சியும் பெருகும். குறிப்பாக திருமணம் தள்ளி போகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மேலும் குடும்பத்தில் உள்ள பண பிரச்சனை நீங்கும்.
இதையும் படிங்க: வீட்டில் ஓயாத பிரச்சனை? உப்பு ஜாடி சரியான இடத்தில் இருக்கா? இல்லேன்னா இதுதான் காரணம்..
நாளை சனிக்கிழமை என்பதால் அமாவாசை பிறப்பதால் இந்த தினத்தன்று அதிகாலை எழுந்து குளிக்கவும். பின்னர் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று உங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கவும். பின் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் தீபம் ஏற்றவும். கடைசியாக உங்கள் முன்னோர்களின் படத்திற்கு முன் பூக்களை தூவி விளக்கேற்றவும்.
இவற்றை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அந்நாளில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் முன்னோர்களை வழிபடவும். பின்னர் காகங்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த உணவை கொடுக்கவும். இவ்வாறு செய்வது உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்ததாகும். அதுபோலவே இந்த அம்மாவாசை நாளில் ஏழை எளியவர்களுக்கு மற்றும் உணவில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு வயதானவர்களுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள எதிர்மறை காரியங்கள் நீங்கி சுப காரியம் நடக்கும்.