நெற்றியில் திருநீறு வைத்தால் இத்தனை நன்மைகளும் கிடைக்குமா? உண்மையான பின்னணி என்ன தெரியுமா?

By Ma riya  |  First Published Jun 15, 2023, 3:45 PM IST

நெற்றியில் திருநீறு வைப்பதால் கிடைக்கும் பலன்களும், அதன் பின்னணி காரணங்களும் இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 


இந்து சமயத்தவர்கள் பெரும்பாலும் நெற்றியில் திருநீறு, குங்குமம், திருமண் அல்லது சந்தனம் போன்றவை பூசி இருப்பார்கள். பிற மதத்தினர் இதனை மத அடையாளமாக பார்த்தாலும், திருநீறு வைப்பதால் மற்ற சில நன்மைகளும் கிடைக்கின்றன. அதை வெறும் மத அடையாளமாக சுருக்கிவிடமுடியாது. 

இந்து மதத்தில் ஆணோ, பெண்ணும் யாராக இருந்தாலும் வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது. கண்டிப்பாக திருநீறு அல்லது குங்குமம் ஏதேனும் நெற்றியில் இட்டு கொள்ளவேண்டும். நெற்றியின் சரியான இடத்தில் திருநீறு வைத்தால் மட்டுமே நரம்புகள் தூண்டப்படும். இதனால் திருநீறு வைப்பதற்கான அனைத்து பலனையும் நீங்கள் பெறலாம்.  

Tap to resize

Latest Videos

​திருநீறு ஏன் பூசுகிறார்கள்?

நம்முடைய நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசுவது சிறப்பான பலன்களை தரும். சிவபெருமானை வணங்குபவர்கள் நெற்றியில் மூன்று கோடுகள் போல திருநீறு அணிந்து கொள்வார்கள். மகாவிஷ்ணுவை வணங்குபவர்கள் நாமமாக திருமண் பூசி கொள்வார்கள். அம்பிகையை வழிபாடு செய்பவர்கள் நெற்றியில் சிவப்பு வண்ணத்தில் வட்ட வடிவ பொட்டு போல வைத்துக் கொள்வார்கள். இந்த மூன்றையுமே திலகம் என்று தான் அழைக்கிறோம். 

இவற்றில் எதை வைத்தாலும் நெற்றியில் இரு புருவங்களுக்கும் மத்தியிலே தான் வைப்பார்கள். புருவங்களுக்கு இடையே உள்ள இந்த இடத்தை ஆகாய சக்கரம் என்பார்கள். இந்த ஒற்றைப் புள்ளியில் தான் உடலின் மொத்த கட்டுப்பாடும் இருக்கிறது. நீங்கள் தியானம் செய்தாலும், ஒருமுகப்படுத்தினாலும் அதற்கு ஆதாரப் புள்ளி இங்குதான் உள்ளது. 

திருநீறு வைக்கும் முறை :

விபூதியை வைக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி முறைகள் உண்டு. ஆண்கள் திருநீரு வைத்து கொள்ளும் போது சுட்டு விரல் மற்றும் பெரு விரலை விடுத்து நடுவில் இருக்கும் 3 விரல்களை உபயோகித்து திருநீறு இட வேண்டும் என்பதே விதி. அதே போல பெண்கள் திலகம் போல மோதிர விரலால் தொட்டு எடுத்து வைப்பதே விதி. இதுவே ஆண்கள் குங்குமம் வைக்க விரும்பினால் பெருவிரலால் தான் எடுத்து வையுங்கள். 

மனித மனம் மட்டுமல்ல, மனித உடலும் தெய்வங்கள் வசிக்கும் கோயில் போன்றது. சிவன் நம்முடைய இரு புருவங்களுக்கும் இடையே வசிப்பதாக நம்பப்படுகிறது. இதனை ஆன்மிக மையமாக கருதுவதால் சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இதையே மனிதனுக்கு பார்த்தால் புருவங்களுக்கு இடையே உள்ள பகுதி ஆகாய சக்கரம் என்றும் அதில் மனதை நிலைநிறுத்துவதே தியானமாகவும் கருதப்படுகிறது.  

இதையும் படிங்க: மயானமே மாளிகை! சாம்பல் பூசி நிர்வாணமாக திரியும் அகோரிகளின்.. திகிலூட்டும் வாழ்க்கையை பற்றி தெரியுமா?

திருநீறு அணிவதன் முக்கியத்துவம் :

திருநீறு பூசுவது ஆன்மீகரீதியாக மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் பயனுள்ளது. நாம் நெற்றியில் விபூதி வைத்துக் கொள்வது எதிர்மறை சக்திகள் அல்லது கெட்ட எண்ணங்கள் நம்மை நெருங்காமல் தற்காத்துக் கொள்ளும். திருமண், திருநீறு, குங்குமம் ஆகியவை சாம்பல் சந்தனம், செந்தூரம் போன்ற பொருள்கள் கலந்து செய்யப்படுகின்றன. இயற்கையிலே இந்த பொருள்கள் மூளையின் செயல்திறனை சமநிலைப்படுத்தும் திறன் கொண்டவை. மேலும் நேர்மறை சக்தியையும் அதிகரிக்கும். 

திருநீறு மட்டுமல்ல சந்தனத்தை நாம் நெற்றியில் வைப்பதாலும் மன அழுத்தம் நீங்கும். திருநீறு பூசுவதால் மூளையின் செயல்திறன் நன்றாக இருப்பதால் நினைவாற்றல் பெருகும். சுட்டு விரலால் சந்தனம் எடுத்து நெற்றியில் சந்தனம் வைப்பதால் உடல் முழுக்க குளிர்ச்சி பரவும். சிந்தனையை தெளிவாக்கிவிடும். இங்கு சொல்லப்பட்டுள்ள எளிய குறிப்புகளின்படி திருநீற்றை பூசி இறையருளை பெற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: இதை தொடர்ந்து செய்யவில்லை என்றால் நம் வீட்டு பூஜையறையில் உள்ள கடவுள்கள் உயிரோட்டமாக இருக்கமாட்டார்கள்..!!

click me!