ஆடி மாதமே சிறப்பான மாதம் தான் என்றாலும், ஆடி வெள்ளிக்கிழமைக்கு என்று தனிப்பெருமை உண்டு.
ஆடி மாதம் என்றாலே ஆன்மீக ரிதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாதம். வழிபாட்டிட்ற்கு உரிய மாதம். விவசாயத்திற்கு நீர் வரத்து அதிகரிக்கும் மாதம். அம்பாளுக்கு உரிய மாதம். அதற்காகவே அம்பிகையை கொண்டாடுவோம் என்று சொல்லி வழிபட வைத்தனர். ‘ ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று விவசாயத்தை சொல்லி வைத்தனர். ஆடி மாதம் என்பது காற்றும் மழையுமாக இருக்கும். ஆடி மாதத்தில் தான் மழைக்காலம் தொடங்கும். இந்த பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு என்பதால் தான் ஆடி மாத வழிபாடுகளில் வேப்பிலையும் எலுமிச்சையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆடி மாதமே சிறப்பான மாதம் தான் என்றாலும், ஆடி வெள்ளிக்கிழமைக்கு என்று தனிப்பெருமை உண்டு. தமிழ் மாதத்தில் 4-வதாக வரும் ஆடி மாதத்தில் சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கிறது. ஆடி மாதத்தில் இறைவியை நாடி சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும் மாதம். எனவே ஆடி மாதம் அம்பிகையை வழிட்படால் கோடி நன்மை கிடைக்கும் என்று கூறுகின்றனர். எனவே ஆடி வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை வழிபட்டால் அனைத்தும் நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்றும் வாழ்வு வளமாகும். முந்தைய நாளை வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். பின்னர் வெள்ளிக்கிழமை வாசலில் மாவிலை தோரணம், வேப்பிலை கட்டிக்கொள்ளுங்கள். பூஜை அறையில் கோலமிட்டு, அதில் குத்துவிளக்கு சந்தனம் குங்குமமிட்டு பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தீபமேற்றி அம்மனை எழுந்தளுள செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் லலிதா சகஸ்கரநாம பாராயணம் செய்து, ஓம் சக்தி என்று வழிபட வேண்டும். நிறைவாக குத்துவிளக்கிற்கு தீப தூப ஆராதனை செய்து, பாயாசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியம் செய்து உங்கள் பிரார்த்தனைகளை வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆடி வெள்ளிக்கிழமையில் குத்து விளக்கு பூஜை செய்தால், நல்ல கணவன் அமைவார்கள். தோஷங்கள் நிவர்த்தியாகும். ராகுகாலத்தில் குத்துவிளக்கு பூஜை செய்தால் சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் என அனைத்தும் நீங்கிவிடும். மேலும் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்கு தொழில் மேன்மையும் கிடைக்கும். ஆடி வெள்ளியன்று, குத்துவிளக்கு பூஜை செய்தவுடன், சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் வைத்து கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும். எனவே தான் கோடி நன்மை தரும் ஆடி வெள்ளியில் இதனை குறிப்பிடுகின்றனர்.
மேலும் ஆடி வெள்ளிக்கிழமையில் மாலை நேரத்தில் அம்பிகை, அகிலாண்டேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால், நிறைந்த செல்வம் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி பூஜை மேற்கொள்ளப்படுகிறது.
Aadi Month Rasi Palan 2023: இந்த ஆடியில் அதிக பலன்களை பெறப்போகும் 5 ராசிகள்..!!